பிரதான வீதிகளில் செல்லும்
தனியார் மற்றும் அரச பஸ்களின் போட்டி காரணமாக பயணிகள் அச்சப்படும் அளவுக்கு சாரதிகளின் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
வீதி சமிக்கைகள் மற்றும் சிறிய வாகணங்களை அவதானிக்காது பல விபத்துக்களை எதிர் நோக்க
இப்படியான பஸ் ஓட்டுனர்கள் காரணமாக அமைகின்றனர்.
ஒரே இடத்தில் இருந்து சில நிமிடங்கள் வித்தியாசத்திலே
தனியார் மற்றும் அரசு பஸ்கள் பஸ்நிலையங்களில் இருந்து புறப்படுகின்றன
பயணிகளை அதிகமாக ஏற்றுவது யார் என்ற போட்டியில் சாரதிகள் பஸ்களை ஓட்டுவதால் அகோரமான வீதி விபத்துக்கள் நடந்துகொண்டு பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது.
ஒரு மாத காலத்திற்க்குள்
மேற் சொல்லப்பட்ட காரணத்தினால் பஸ் பாரிய விபத்தை சந்தித்தது நாம் யாவரும் அறிந்ததே.
இவ்வாறான சாரதிகளுக்கு
தகுந்த சட்டநடவெடிக்கை அரசாங்கம் எடுக்கவேண்டும்
வீதி விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் ஒரு நவீன காலத்தில் வாழும் நாம்
பல உயிர்களை எதிர்பாரா நேரத்தில் இழந்து வருகின்றோம்
இவ்வாறான வீதி விபத்துகளை தடுக்க
போக்குவரத்து பொலிஸார்கள்
மிகவும்தீவிரமாக செயற்பட வேண்டும்
அதிகமாக மணல் ஏற்றும் டிப்பர்
பஸ், மோட்டார் சைக்கிள்கள்,முச்சக்கரவண்டி
போன்றவைகளை செலுத்தும் சாரதிகள் அவதாணமாகவும்
வேகத்தை குறைத்து வீதி விபத்துக்களை தடுக்க உதவுவோம்.
