இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனுவை தாக்கல் செய்தது.

க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் சேவல் மற்றும் வெற்றிலை சின்னங்களில் போட்டியிடவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் வேட்புமனுவை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் 20.12.2017 அன்று மாலை 2.45 மணியளவில் தாக்கல் செய்தது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் வேட்புமனு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமாரவிடம் கையளித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா, அம்பகமுவ, நோர்வூட், கொட்டகலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா, ஆகிய பிரதேச சபைகளும், அட்டன் டிக்கோயா நகர சபை ஆகியவற்றில் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனு கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான கனபதி கணகராஜ், பிலிப்குமார் ,பழனி சக்திவேல், ஆகியோருடன் ஆர்.எம்.பி. ரத்நாயக்கா, முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பி.ராஜதுரை மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை தலவாக்கலை லிந்துலை நகரசபை மற்றும் நுவரெலியா மாநகரசபை ஆகியவற்றுக்கு ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -