மன்னார் றோயல் கெஸ்ட் அலைமோதும் மக்கள் வெள்ளம். எம்.பி மஸ்தான் தலைமையில் நேர்முக தேர்வு.





ன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு தற்பொழுது மன்னார் றோயல் கெஸ்ட் மண்டபத்தில் இடம்பெறுவதால் அவ்விடததில் மக்கள் வெள்ளம் அலைமோதுகின்றது.

மன்னார் நகரசபை,மற்றும் மன்னார்,நானாட்டான் மாந்தை மேற்கு பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முக்கியஸ்தர்கள் தமது தொண்டர்கள் ஆதரவாளர்களுடன் வருகை தந்துள்ளனர்.
இதனால் அவ்விடததில் சனநெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை முசலி பிரதேச போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு இன்று காலை நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -