கெசல்கமுவ ஓயாவில் கழிவு எண்ணை கலந்தது கறுப்பாக மாறிய ஆறு

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-




காசல்ரீ நீர்தேக்கத்தில் நீர்வழங்கும் கெசல்கமுவ ஒயாவில் கழிவு எண்ணை கலந்துள்ளமையினால் நீர்தேக்கத்தில் நீர் மாசடைந்துள்ளது

பொகவந்தலா பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றிலிருந்தே கழிவு எண்ணையும் கழிவு தேயிலையும் 22.12.2017 காலை 7 மணியளவில் திறந்து விடப்பட்டுள்ளது.

கழிவு எண்ணை கலந்துள்ளமையினால் கெசல்கமுவ ஓயா ஆற்றின் 20 கிலோ மீட்டர் தூரம் வரை நீர் கருப்பு நிறமடைந்துள்துடன் துர்நாற்றமும் வீசுகின்றது மேலும் ஆற்று நீரை பயன் பொது மக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் கழிவு கலந்த ஆற்று நீர் காசல்ரீ நீர்தேக்கத்தில் கலப்பதனால் நீர் மாசவதுடன் மீன்கள் உட்பட நீர்வாழ் உயிரினங்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் பொகவந்தலா பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -