மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியை வல்லுறவுக்கு அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞனை இம்மாதம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹீத் நேற்று (3) உத்தரவிட்டார்.
திவுலுபிட்டிய ,ஹின்ன கலேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
திவுலுபிட்டிய ,ஹின்ன கலேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
குறித்த சந்தேக நபர் மொறவெவ பகுதியில் உள்ள பதினாறு வயதுடைய சிறுமியை அனாமேதைய தொலைபேசி மூலமாக அறிமுகமாகி காதலித்து சிறுமியின் வீட்டாருக்கு தெரியாமல் சிறுமியை திவுலப்பிட்டிய பகுதிக்குச் அழைத்துச் சென்று தனிமையில் வீடொன்றில் ஒரு மாதகாலமாக வாழ்ந்துள்ளார்.
பின்பு சிறுமியின் பெற்றோர் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து மொறவெவ பொலிஸார் திவுலப்பிட்டிய பொலிஸார் கூடாக சந்தேக நபரையும் சிறுமியையும் அழைத்து விசாரணைகள் மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி மருத்துவ அறிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரை பொலிஸார் பதில் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.