இலங்கை நிர்வாக சேவை பயிற்சி தர உத்தியோகத்தர்களை சந்தித்த கிழக்கு ஆளுனர்..



அப்துல்சலாம் யாசீம்-

லங்கை நிர்வாக சேவை பயிற்சி தர உத்தியோகத்தர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவிற்குமிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை பிற்கல் ஆறு மணியளவில் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இவ்வுத்தியோகத்தர்களை வரவேற்ற கிழக்கு மாகாண ஆளுனர் இந்த நாட்டின் தேசிய அபிவிருத்தியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் நிர்வாக சேவை அதிகாரிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும் அதிகார பரவலாக்கல்.மாகாண சபை நிர்வாக முறை ஆகியவற்றை தௌிவுபடுத்திய ஆளுனர் மத்திய மற்றும் மாகாண அரச நிர்வாகங்களுக்கிடையில் சுமூகமான தொடர்பு நடைமுறைகளையும் வலியுறுத்தினார்.

தேசிய நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கிழக்கு மாகாண ஆளுனர் இவ்விடயத்தில் நிர்வாக சேவை அதிகாரிகள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

பிரதம செயலாளர் ஆளுனரின் செயலளார் மற்றும் அமைச்சுக்களின்செயலாளர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -