ரூபா 1 கோடி 86 இலட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பன நிகழ்வு

கர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோள் மற்றும் முயற்சியின் பேரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீற்று வீதியாக அமைக்கப்படவுள்ள புதிய காத்தான்குடி வீதிகளின் அங்குரார்ப்பன நிகழ்வு பின்வரும் விபரப்படி இடம்பெறவுள்ளது.

நிகழ்வு 01 காலம் – 08.12.2017,வெள்ளிக்கிழமை

· பிற்பகல் 4.00 மணி – கர்பலா வீதி முதலாம் குறுக்கு கொங்கிறீற்று வீதி வேலைகளை ஆரம்பித்தல்-நிதி ஒதுக்கீடு ரூபா 24 இலட்சம்

· பிற்பகல் 4.45 மணி- அப்றார் வீதியின் 3ம் குறுக்கு,4ம் குறுக்கு கொங்கிறீற்று வீதி வேலைகளை ஆரம்பித்தல் - நிதி ஒதுக்கீடு ரூபா 31 இலட்சம்

· பிற்பகல் 5.15 மணி – அன்வர் பாலர் பாடசாலை வீதி மற்றும் குறுக்கு வீதி கொங்கிறீற்று வீதி வேலைகளை ஆரம்பித்தல்-நிதி ஒதுக்கீடு ரூபா 80 இலட்சம்

நிகழ்வு 02 காலம் – 09.12.2017,சனிக்கிழமை

· பிற்பகல் 4.30 மணி –பௌஸி மாவத்தை குறுக்கு வீதி(ஜே.பி வீதி)(கடற்கரையிலிருந்து 1ம் குறுக்கு)கொங்கிறீற்று வீதி வேலைகளை ஆரம்பித்தல்- நிதி ஒதுக்கீடு ரூபா 34 இலட்சம்

· பிற்பகல் 5.15 மணி- பாம் வீதி 2ம் குறுக்கு கொங்கிறீற்று வீதி வேலைகளை ஆரம்பித்தல் -

நிதி ஒதுக்கீடு ரூபா 17 இலட்சம்

மேற்படி நிகழ்வுகளில் பிரதம அதிதியாக நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களும் கௌரவ அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்,காத்தான்குடி நகரசபையின் செயலாளர் திருமதி.எம்.ஆர்.எப். றிப்கா ஷபீன் SLAS மற்றும் முன்னாள் நகர முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை உற்பட பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.எனவே மேற்படி நிகழ்வுகளில் தங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -