மத்திய மாகாண கல்வி அமைச்சினால் 45 இலட்சம் நிதியொதுக்கீட்டின் கீழ் அட்டன் செனன் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டிடத்தை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் 19.11.2017 ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
இதன்போது மத்திய மாகாண விவசாய,இந்து கலாச்சார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சக்திவேல்,கனபதி கனகராஜ், அட்டன் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன்,மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்,ஆசிரியர்கள் ,மாணவர்கள் உட்பட கலந்துக்கொண்டோரையை இங்கு காணலாம்.



