மகிந்தர் ஆட்சியைப் பிடிக்க மெகா திட்டம்..பிக்குகள் தேர்தல் களத்தில் ! ஆபத்தில் தமிழ் முஸ்லிம்கள் சமூகங்கள் !

ஆய்வாளர் M.M. நிலாம்டீன்-

கிந்தர் ஆட்சியைப் பிடிக்க மெகா திட்டம்..பிக்குகள் தேர்தல் களத்தில் ! ஆபத்தில் தமிழ் முஸ்லிம்கள் சமூகங்கள் !

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் போட்டியிடவுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அதிகளவில் பௌத்த பிக்குகளையும், படையினரின் குடும்ப உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தவுள்ளது ,

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வாக்குகளை அதிகரிப்பதற்காக, பௌத்த பிக்குகளை அதிகளவில் வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான தேர்தல் பரப்புரையை முன்னடுக்கவும் சிங்கள வாக்குகளை அதிகரிக்கவும் மாபெரும் மெகா திட்டம்.தேவைப்பட்டால் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது விஷம் கக்குவது அதன் மூலம் ஐ.தே.க.க்கு வாக்குகள் பெருகுவதை தடுப்பது .மஹிந்த அணிக்கு வாக்குகளை அதிகரிப்பது.

உள்ளூராட்சித் தேர்தலில் இந்தக் கட்சி 30 வீதம் வரை பௌத்த பிக்குகளை வேட்பாளர்களாக நிறுத்த திட்டமிட்டுள்ளது.தற்போது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் பிரதேச மட்டத்தில் இடம்பெற்று வருகிறது..

ராணுவக் குடும்ப பெண்கள்

அதேவேளை, போரில் உயிரிழந்த படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தவும், பொது்ஜன முன்னணி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் என்பது போரில் கொல்லப்பட்ட அரச ராணுவ காரர்களின் புகைப்படங்களையும் காணொளிப் பதிவுகளையும் தேர்தல் பரப்புரையின் போது மக்களிடம் காண்பித்து அனுதாப வாக்குகளைப் பெறுவது.

மறு புறம் இந்த ராணுவ பெண்கள் அணி வேட்பாளர்கள் தமிழர்களையும் தமிழ் விடுதலை இயக்கங்களையும் போட்டுத் தாக்கி முடிந்த வரை விஷம் கக்கி ஒரு மாபெரும் இனவாதத்தை கக்க வைத்து வாக்கு வேட்டை நடத்துவது.

அந்த வகையில் நாட்டிலுள்ள முப்படையின் வாக்குகள் மற்றும் அவர்களின் குடும்ப வாக்குகளை பெறுவது .அதிகளவில் பெண் வேட்பாளர்கள் தேவைப்படுவதாலும், படையினரின் குடும்பங்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுவும் ஒரு பாரிய மெகா திட்டம்தான் !

மறு புறம் மஹிந்த அணி நல்லாட்சி அரசை போட்டுத் தாக்கி வங்கி பிணை முறி தொட்டு பெட்ரோல் தட்டுபாடு வரை விமர்சனம் செய்வது.

இந்த மூன்று திட்டங்கள் மூலமாக ஐதேக க்கு வாக்களிக்கும் சிங்கள வாக்குகளை பெருமளவு குறைக்கலாம் .என்பதுதான் மாஸ்டர் பிளான்

அத்துடன் மகிந்தவின் திட்டம் என்பது தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன்றி தனிச் சிங்கள மக்களின் வாக்குகள் மூலமாக எவனை கொன்றாவது ஆட்சியைப் பிடிக்க வகுத்துள்ள பாரிய திட்டம் என்றால் மிகையாகாது .

உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த அணி இரண்டாம் இடத்திற்கு வந்தாலும் பாரிய வெற்றியே !. மஹிந்த இந்த திட்டத்தில் வெற்றி பெற்றால் வடக்கு கிழக்கு உட்பட மேற்கில் வாழும் முஸ்லிம்களுக்கு பாரிய சிக்கல்தான் .அப்படியானால் ஒரு மியன்மாரை நாட்டில் எதிர் பார்க்கலாம் .

காரணம் ஒரு பிக்கு ஒரு MP யாக இருந்து காட்டும் துவேசம் என்பது நாடாளுமன்றம் .மாகாணசபை .உள்ளூர் சபை ஆகிய 3 சபைகள் உட்பட முழு அரச ஒத்துழைப்புடன் ஒரு பாரிய முஸ்லிம் மனித வேட்டை அரங்கேறும் நாள் வெகு தூரம் இல்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -