சுனாமி ஒத்திகை நிகழ்வில் இயங்க மறுத்த நிந்தவூர் எச்சரிக்கை கோபுரம்..!


சுலைமான் றாபி-

ர்வதேச சுனாமி தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் (05) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சுனாமி கோபுரங்களை அண்மித்த பிரதேசங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்வு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இருந்த போதும் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமையப் பெற்றுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரமானது இயங்க மறுத்த நிலையில் காணப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நேரம் பி.ப (2.00 மணி தொடக்கம் 2.15 ) மணி வரைக்கும் இரண்டு தடவைகள் ஒலியெழுப்பப்பட்ட போதும் விழிப்புணர்வு ஒலிச்சமிஞ்சையானது சிறிய ஒலிச்சத்தத்துடன் கேட்ட போதும், அதன் பிரதான சேமிப்புக்கு கருவியிலிருந்து ஒரு வித வெடிப்புச் சத்தமும் கேட்டது.

மேலும் இதன் இயக்க நிலையில் பாதியில் கோபுரத்தின் தொடர்பும் தானாகவே செயலிழந்து காணப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை கோபுரம் சரியாக இயங்க மறுத்ததோடு இவ்விழிப்புணர்வானது மக்கள் மத்தியில் முறையான முறையில் போய்ச்சேரவில்லை என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் நிந்தவூர் பிரதேசத்தில் அருகில் உள்ள காரைதீவில் இந்த ஒலிச்சமிஞ்சையானது நிந்தவூர் வரைக்கும் கேட்டதாகவும் இந்தப் பிரதேசத்தினை அண்டிய மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கையில் 2010/11 காலப்பகுதியிலேயே இவ் எச்சரிக்கை கோபுரங்கள் (77) அமைக்கும் பணி முற்றாக முடிவுற்றிருந்தது. அதன் பின்னர் அவை தனியார் நிறுவனம் ஒன்றினாலே பராமரிப்பு நடவடிக்கையினை 2015 ஒப்பந்த காலம் வரை மேற்கொண்டது.

பின்னர் ஒரு வருடம் எந்த வித பராமரிப்பு நடவடிக்கையும் மேற் கொள்ளப்படாமலும், முறையான தொழிநுட்பத்துடன் கூடிய நிறுவனம் இல்லாமலும் காணப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஆண்டு மே மாதம் முதல் முறையான தொழிநுட்பவியலாளர்களைக் கொண்ட நிறுவனம் பராமறிப்பு நடவடிக்கைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு மேலதிகமாக இலங்கை இராணுவத்தின் விசேட சமிஞ்சை பிரிவு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவற்றிற்கான உபகரணங்கள் வெளிநாடுகளிலிருந்தே (அமெரிக்கா,ஜேர்மன்) கூடுதலாக தருவிக்கப்படுகின்றன. அனைத்து கோபுரங்களும் திருத்த வேலைகள் கடந்த மாதமளவிலேயே முடிவுற்றன.

இது இவ்வாறு இருக்க நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் சுனாமி எச்சரிக்கை கோபுரத்திலிருந்து எழுப்பப்பட்ட ஒலிச்சமிஞ்சையானது மக்கள் மத்தியில் எந்த வித மாற்றங்களையும் ஏற்படுத்த வில்லையெனவும், தற்செயலாக சுனாமி ஏற்பட்டால் தற்பாதுகாப்பிற்காக தங்களால் ஒன்றுமே செய்ய முடியாது போகும் எனவும் இம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே உடனடியாக இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், நிந்தவூர் பிரதேச செயலகம் ஆகியவைகள் ஒன்றிணைந்து இதனை அவசரமாக மீள் இயக்கப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -