கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சி.எம்.செரீப் கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சிக்கான பிரதிப் பிரதம செயலாளராக இடமற்றப் பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய இந்த இடமாற்றம் இடம் பெற்றுள்ளது.
இலங்கை நிர்வாக சேவை முதலாம் தர உத்தியோகத்தரான இவர் கிண்ணியா, மூதூர், வாழைச்சேனை, காத்தான்குடி போன்ற பிரதேசங்களின் பிரதேச செயலாளராக பணியாற்றியுள்ளார். அதேபோல மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் புனர்வாழ்வு அமைச்சு, உள்ளூராட்சி அமைச்சு, வீதி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகவும் பனி புரிந்து உள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக பேரவைச் செயலாளராக பணிபுரிந்த இவருக்கு திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபராக பொதுச் சேவை ஆணைக்குழு பெயர் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையிலேயே இந்த இடமாற்றம் இவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
புதிய பேரவைச் செயலராக திருமதி கலாமதி பத்மராஜா நியமிக்கப் பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றது.