அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேசம் எல்லாம்இன்று (15) புதன்கிழமை பகல் சுனாமி என செய்தி பரவியதையடுத்து அல்லோலகல்லோலமாகியது.
நீலாவணை தொடக்கம் கல்முனைசாய்ந்தமருது காரைதீவு நிநதவூர் அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் வரை இப்பதட்டமும் பீதியும் நிலவின.
கடல் உள்வாங்கியயதாகவும் கரையோரத்திலுள்ள பல கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக சடுதியாக குறைந்தமையும் என்ற செய்தி பரவியதையடுததுஇப்பதட்டத்திற்குக் காரணம்.
எனினும் சுனாமி அனர்த்த எச்சரிக்கை கோபுரம் அலறவில்லை. பொலிசார் மற்றும் அனர்த்தமுகாமைத்துவப்பிரிவினர் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
எங்கு பார்த்தாலும் மக்கள் பயபீதியுடன் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு பிரதானவீதியை நோக்கி ஓடிவந்தனர்.
பாடசாலைகள் இழுத்துமூடப்பட்டன. பிள்ளைகளை அழைத்துச்செல்ல பெற்றோர்கள் முண்டியடித்தனர்.
அலுவலகங்களில் இருந்த அலுவலர்கள் தொடக்கம் அனைவரும் பீதியில் வெளியேறினர்.
இது வதந்தி பீதியடையவேண்டாம் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவுப்பணிப்பாளர் சியாட் தெரிவித்தார்.









