யோகாசனம் உலகளாவிய ரீதியில் பிரபலமாக உள்ள உடற்பயிற்சி முறையாகும். இதில் அடங்கியுள்ள ஏராளமான நன்மைகளை கருதி சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களும் யோகாவை விரும்பி செய்து வருகின்றனர்.
ஆனால் சவுதி அரேபியா அரசு யோகாவை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வந்தது.
இந்தியபிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் மாதம் 21 ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சவுதி அரசு நேற்று யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுள்ளது. விளையாட்டின் ஒரு அங்கமாக யோகாவை அங்கீகரித்துள்ளது.
சவுதி அரேபியாவில் யோகாவிற்கு ஒரு விளையாட்டு நடவடிக்கையாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சவுதி அரசிடம் இருந்து உரிமம் பெறப்படும் என வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(வீரகேசரி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -