ஹம்பாந்தோட்டை நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ஒரு சேற்றில் நட்டிய கம்பைப் போல ஒரு நிலையான கொள்கை இல்லாமல்இருப்பதை நாம் அறிவோம்.ஆனால் இந்தளவு பகிரங்கமாக அவர் மக்களை ஏமாற்றுவார்என நாம் கனவிலும் நினைக்கவில்லை.
அண்மையில் சோபித தேரரின் நினைவு தின நிகழ்வில் மத்திய வங்கி ஊழல் தொடர்பில்கடுமையாக ஜனாதிபதி பேசியிருந்தார்.இதனை துக்கிப்பிடித்துக்கொண்டு சில சுதந்திரகட்சி உறுப்பினர்களும் அவரின் பெருமைகளை பேசித்திரிகின்றனர்.
மத்திய வங்கியை கொள்ளையடித்த ஐக்கிய தேசிய கட்சியைஇணைத்துக்கொண்டு,அர்ஜுன் மகேந்திரனின் நண்பரை பிரதமராக வைத்துக்கொண்டுஆட்சி செய்வது பற்றி அறியாமாலா ஜனாதிபதி இந்த கருத்துக்களை கூறிவருகிறார் எனநாம் கேட்கிறோம்.
ஒரு ஜனாதிபதி நாட்டின் பல தரப்பட்ட கொள்கைகளில் உள்ள வெவ்வேறு தரப்புகளைசந்திக்க நேரிடும்.சில வேளைகளில் ஒருவருடைய கொள்கை இன்னுமொருவர் பாதிக்கும்வகையிலும் அமையலாம்.
பேரின மக்களிடம் சென்று ஒருபோதும் இராணுவத்தை காட்டி கொடுக்க மாட்டேன்,ஒருபோதும் நாட்டை பிரிக்க மாட்டேன் என கூறும் ஜனாதிபதி வடக்கில் போய்இன்னொரு விடயத்தை கூறுகிறார்.
யுத்த வெற்றிக்கு மிகப் பெரும் பங்காற்றிய சில முக்கிய இராணுவத் தளபதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அதேநேரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் காரியாலயம் மூலம்இலங்கை ரானுவத்திற்கு என்ன நடக்கும் என்பதை முழு நாடும் அறியும்.
இப்படியான சூல்நிலையில் அண்மையில் இலங்கை ராணுவம் நடத்திய நிகழ்வில் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி புலம்பெயர் விடுதலை புலிகள் தமிழ் ஈழத்தினை அடையமுயற்சிப்பதாகவும் அதற்கு தான் இடமளிக்க போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
இலங்கை நாட்டை கருவறுக்க கனவு கொண்டிருக்கும் டயஸ்போராக்களின் ஆதரவுடன்ஆட்சிக்கு வந்து இன்று அவர்களுக்கு தேவையான அரசமைப்பை உருவாக்க துடிக்கும்ஜனாதிபதி ராணுவத்தினர் முன்னிலையில் மேற்கண்ட கருத்தை கூறி இருப்பதும்வேடிக்கையானது.
வடக்கு, கிழக்கை இணைத்து தமிழீழத்துக்கான முதல் படியை வைக்கப்போகிறார்கள்.இது நாட்டை பிரிப்பதுவல்லாமல் வேறு என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
