மாவீரர்களால்தான் இன்று ஓரளவாவது நிம்மதியாகவிருக்கிறோம்! நற்பிட்டிமுனை மாவீரர்தினத்தில் இராஜேஸ்வரன்!




காரைதீவு நிருபர் சகா-

மா
வீரர்கள் புதைக்கப்படவில்லை மாறாக விதைக்கப்பட்டுள்ளனர். அவர்களால்தான் இன்று ஓரளவாவது நாம் சுதந்திரமாக நிம்மதியாக இருக்கிறோம். ஒவ்வொரு தமிழனும் அதனை நிறைவுகூரவேண்டியது கடமையாகும்.

இவ்வாறு நேற்று நற்பிட்டிமுனையில் நடந்த மாவீரர்தினநிகழ்வில் கிழக்குமாகாணசபையின் மன்னாள் உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

கல்முனையடுத்துள்ள நற்பிட்டிமுனையில் முன்னாள்கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரனின் ஏற்பாட்டில் மாவீரர்தினம் சிறப்பாக அனுஸ்ட்டிக்கப்பட்டது.

முன்னதாக நற்பிட்டிமுனை அம்பலத்தடிப் பிள்ளையாhர் ஆலயத்தில் ஆலயபிரதமகுரு பிரம்மஸ்ரீ மோஹானந்தகுருக்கள் விசேட பூஜையை நடாத்தினர்.

ஈகைச்சுடரேற்றி 2நிமிடநேரம் மௌனாஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து ஆலயத்தலைவர் கே.லவக்குமார் தலைமையில் உணர்வுபூர்வமாக மாவீரர்தின உரைகள் நிகழ்த்தப்பட்டன.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தமிழரசுக்கட்சிகாரைதீவுப்பிரதேச அமைப்பாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் உரையாற்றினர்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
யுத்த்ததில் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களையும் தமிழ்மக்களையும் இழந்தோம். அந்த மனிதப்படுகொலைகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.அதனைக்கண்டிக்கின்றோம்.

இம்மாவீரர்களின் தியாகத்தால் இன்றைய நல்லாட்சி அரசில் வடகிழக்கெங்கும் அச்சுறுத்தலின்றி மாவீரர்தினத்தை அனுஸ்ட்டிக்கமுடிகிறது.
எனினும் எமது பிரச்சனை தீர்க்கப்படவேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து பயணிக்கவேண்டும்.என்றார்.

மாவீரர் பெற்றோர்கள் மனைவிமார் இளைஞர்கள் போராளிகள் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -