க.கிஷாந்தன்-
நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக மலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன நெரிசல் நிலை காணப்பட்டு வருகின்றன.
அட்டன் பகுதில் சில பெற்றோல் நிறைவு பெற்றுள்ளதால் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக வாகன நெரிசல் காணப்பட்டன.பெற்றோல்நிலையங்களில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக பொது போக்குவரத்துக்கும் தடை ஏற்படட்டன.
இந்த எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் உட்பட பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் பெற்றோல் நிரப்புவதற்கென சுமார் இரண்டு மீற்றர் தூரம் வரை வாகன நெரிசல் காணப்பட்டன. இதனால் சாரதிகள் மற்றும்பொது மிக பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.
தற்போது மலையகத்தில் காணப்படும் எண்ணை நிரப்பு நிலையங்களுக்கு 3500 லீற்றர் மாத்திரம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுவருவதாகவும், இந்த பெற்றோல் இரண்டு மணித்தியாலங்களுக்கு மாத்திரமே தாக்கி பிடிக்கக்கூடியதாக உள்ளதாகவும் பெற்றோல் நிரப்பு உரிமையாளர்கள்தெரிவிக்கின்றனர்.
இந்த பெற்றோல் தட்டுப்பாடு 08.11.2017அன்று தினத்தில் உக்கிரமடைய உள்ளதால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் எனபலர் சுட்டிக்காட்டுகின்றனர்,
எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் மிக விரைவில் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு முன் இதற்கு சரியான முடிவினை பெற்றுத்தர வேண்டுமென பொது மக்கள்கோரிக்கை விடுக்கின்றனர்.



