
முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்-
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் சமூக சேவைப் பிரிவினரால் விதவைகளுக்கான வாழ்வாதர உதவிப் பணம் வழங்கும் நிகழ்வு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு 29-11-2017, இன்று நிந்தவூர் பிரதேச செயலக சமூகசேவை பிரிவு காரியாலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விதவைகளுக்கான உதவிப் பணமாக தலா 25000 ரூபாய் வீதம் இரு விதவைகளுக்கும் ரூபாய் 50000 முதல் வழங்கப்பட்டதோடு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் T.M.M. அன்சார் அவர்கள் கலந்துகொண்டதோடு சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் M.I.M. முர்சித், கிராம நிருவாக உத்தியோகத்தர் A.M.சம்சுதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் U.L.S.ஜெமீலா மற்றும் சமூக சேவை அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு இவ்வுதவிப் பணம் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்கிவைத்தனர்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் சமூக சேவைப் பிரிவானது தமது சேவையை உரிய முறைப்படி அரும்பெரும் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
