விடுதலைப் புலி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்த மாகாணசபை

டக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று நிறைவடையும் தருணத்தில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபை ஒத்தி வைப்பு வேளையிலும் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த சபைக்குள் அனுமதி அளிக்க முடியாது என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமாயின், தனித்தனியாக சபைக்கு வெளியில் அஞ்சலி செலுத்துமாறு அவைத் தலைவர் சபையில் அறிவித்தார்.

இதேவேளை, காலி- கிங்தொட்டை பகுதியில் நடத்தப்பட்ட சிறுபான்மையினத்தவர் மீதான தாக்குதலுக்கு எதிராக வடக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் சபை அமர்வின்போது நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.BBC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -