காரணம் இந்த உழவு இயந்திரத்தை அதிகளவு இயக்குவது தமிழ் சாரதிகள் என்பதால் பிரதேச செயலாளர் இந்த விடயத்தில் பாராமுகமாக உள்ளார்.
ஆனால் ஏனைய இடங்களில் உள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தின் சாரதியின் இருக்கை சீட்டிற்கு கூரை அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.
ஆனால் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் தொழிலாளிகளின் நலனில் அக்கறை கொள்ளாமல் உயர் மட்ட அதிகாரிகளுக்கும் அரசில்வாதிகளின் திருப்திக்காகவும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் திருப்திப்படுத்தும் நோக்கோடு செயல்பட்டு வருகின்றார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரிகளே இது உங்கள் கவனத்திற்கு ...!
குறித்த செய்தி தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் இம்போட்மிரருக்கு தெரிவிக்கையில்:
இம்முறைப்பாடு தொடர்பில் ஆரம்பத்திலேயே என்னிடம் கேட்டிருந்தால் நான் பதில் வங்கியிருப்பேன், ஆனால் அறிக்கையினைப் பார்த்ததும் பிழையான தகவல் வழங்கப்பட்டிருப்பதனை அறிய முடிகிறது.
குறித்த செய்தியில் போடப்பட்டிருக்கும் கழிவகற்றும் புதிய இயந்திரத்தின் சாரதி முஸ்லிம் ஒருவர்தான். ஆனால் இனமுறன்பாட்டை உண்டுபன்னுவது போல தமிழ் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்று செய்தியின் கருத்துக்கள் அமைந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனால் பிரதேச சபைக்கு நேரடியாக வந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களைக் கேட்டால் செயலாளர் தொழிலாளர்களுடன் நடந்து கொள்ளும் விதம் எவ்வாறு என்று கூறியிருப்பார்கள்.
எனவே குறித்த முறைப்பாடு இடையில் வந்ததே தவிர ஆரம்பத்தில் இருந்து இருப்பதுவல்ல.
கழிவகற்றும் இயந்திரங்களுக்கு பொருத்தப்பட்ட கூடாரங்கள் உடைந்து போயுள்ளதால் அவற்றுக்கு புதிதாக பொருத்தும் பணிகள் விரைவில் இடம்பெற இருக்கிறது என்றும் பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
