தேசிய ரீதியில் முதலிடம்! சம்மாந்துறை மாணவன் சகீப் ஹம்தான் சாதனை!!



எம்.வை.அமீர் -

தேசிய மீலாதுன் நபி-2017 விழாவுக்கான அகில இலங்கை ரீதியான போட்டி நிகழ்ச்சிகளில்,ஆரம்ப பிரிவுக்கான பேச்சுப் போட்டியில் சம்மாந்துறை தாருல் உலூம் வித்தியாலய மாணவன் எம்.எம்.சகீப் ஹம்தான் முதலிடம் பெற்று தனது பாடசாலைக்கும், வலயத்துக்கும்,மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏ.ஆர்.எம்.மாஹீர் (உதவிப் பதிவாளர்,தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) மற்றும் ஏ.எல்.ஜெஸ்மின் ஷிஹானா ஆசிரியை ஆகியோரின் புதல்வனாகிய சகீப் ஹம்தான் அண்மையில் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைதுள்ளதுடன் பல விளையாட்டுப்போட்டிகளிலும் ஏனைய பல போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இவரை பாடசாலை சமூகம் வாழ்த்துகின்ற வேளையில் நாமும் வாழ்த்துகின்றோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -