மட்டு.மாவட்ட மேலதிக அரச அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர்நியமனம்!



காரைதீவு நிருபர் சகா-

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிருவாக சேவை தரம் 1ஜச் சேர்ந்த நிருவாக அதிகாரியான இவர் நிருவாகசேவையில் 13வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

இவர் 2003இல் பட்டிப்பளை பிரதேச செயலாளராக பதவியேற்ற பின்னர் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தார்.
அதன்பிறகு உள்நாட்டுஅலுவல்கள் அமைச்சின் புலமைப்பரிசில் பெற்று ஜப்பானுக்கு சென்று இருவருடங்கள் சர்வதேச விவகாரத்தில் முதுமாணி பட்டம் பெற்று 2014 இல் நாடு திரும்பினார்.

பின்பு காரைதீவு பிரதேச செயலாளராக நியமனம் பெற்றார். அங்கு நேற்றுவரை 3வருடங்கள் 3மாதங்கள் சிறந்த சேவையாற்றியிருந்தார்.

காரைதீவில் கொம்புமுறி விளையாட்டு முதல் பல புது மாற்றங்களுடன் நல்லநிருவாகியாகசேவையாற்றிருந்ததுடன் மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் காரைதீவுக்கான பிரதேச செயலாளர் யார் என்பதுகுறித்து இன்னும் தெரியவரவில்லை.

தற்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இதுவரை யாரும் பதவியேற்கவில்லை என்பதும் இன்றையநிலையில் அங்கு அரசாங்க அதிபரோ மேலதிக அரசாங்க அதிபரோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க் கிரான் பிரதேச செயலாளராகவிருந்து அண்மையில கிரான் பிரதேச செயலாளராக இடமாற்றம்பெற்ற எஸ்.தனபாலசிங்கம் முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -