இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் ஆற்று மண் அகழ்வு தொழிலில் ஈடுபட்டவா்களின் அனுமதிகள் இரத்துச் செய்யப்பட்டு தற்போது அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களுக்கும், அவர்களது ஆதரவாலர்களுக்கும் மண் அகழ்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லுமாறு, பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் முறைப்பாடு செய்தனர்.
குறிப்பாக கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேச மக்கள் குறைந்த விலையில் ஆற்று மண்ணை கொள்வனவு செய்தனர். தற்போது இப்பிரதேசத்தில் அரசியல் பின்னனியுடன் இந்த தொழிலினை செய்கின்ற சிலர் அதிக விலைக்கு ஆற்று மண்ணை மக்களுக்கு வழங்குகின்றனர். இது பெரும் கவலையான விடயமாகும்.
சம்மாந்துறை பிரதேசத்தில் ஆற்று மண் அகழ்வுகளில் இடம்பெரும் அரசியல் தலையீடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் தீர்வினை பெற்றுத்தருமாறு மணல் வியாபார உரிமையாளர் சங்கம், உழவு இயந்திர சங்கத்தினர், மாட்டுவண்டி மணல் வியாபார சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கமைவாக (12) நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜிதமுனி சொய்சாவினை சந்தித்து மேற்குறித்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.
குறிப்பாக மணல் அகழ்வுப்பணியில் அரசியல் தலையீடுகளின்றி சகலருக்கும் உரிய முறையில் அனுமதி வழங்கும் பட்சத்தில் சட்டவிரோத மணல் அகழ்வினை நிறுத்த முடியும் என்பதுடன் சம்மாந்துறை பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கு குறைந்த விலையில் ஆற்று மண்ணை வழங்க முடியும் என்பதனையும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அத்துடன் நெய்னாகாடு ஆற்றங்கரையை அண்டிய பிரதேசத்தில் செங்கல் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களை அப்பிரதேசத்தில் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அந்த ஏழைத்தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அவர்கள் அத்தொழிலினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியாததொரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இது அப்பிரதேசத்திலுள்ள அரச காணிகளை சூரையாடுவதற்கான சூழ்ச்சியேயாகும்.
குறிப்பாக அம்பாரை பாலம் தொடக்கம் கலியோடை வரையான ஆற்றின் கரையாரங்களில் நிரந்தக்கட்டிடடங்கள் அமைக்கப்பட்டிருப்பதனை விட்டுவிட்டு நெய்நாகாடு பிரசேத்தில் சிறு பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களையும், செங்கல் உற்பத்தியாளர்களையும், நாளந்தம் கூலித்தொழில் செய்துவரும் ஏழை மக்களையும், வெளியேற்றி அந்தக்காணிகளை ஆக்கிரமிப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தவிடயம் சம்மாந்துறை பிரதேச அரசியல்வாதி ஒருவரினால் திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்றது. குறித்த அரசியல்வாதியின் ஆதரவாலர்களுக்கு அக்காணிகளை பங்கீடு செய்வதற்கு திரைமறைவில் திட்டமிடப்படுகிறது.
எனவே அந்த ஏழைத் தொழிலாளிகளின் வயிற்றிலடிக்கும் திருட்டுத்தனமான செயற்பாட்டை நிறுத்துமாறும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்குமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மேற்குறித்த பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் உடனடித் தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார் எனவும் அமைப்பாளர் முஸம்மில் மேலும் தெரிவித்தார்.
