ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும்,காத்தான்குடி அமைப்பாளரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ஷெய்யித் அலி சாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியினால் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ஷெய்யித் அலி சாஹிர் மௌலானா அவர்கள் எடுத்துக்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக காத்தான்குடி,பாலமுனை, காங்கேயனோடை மற்றும் கீச்சாம்பள்ளம் போன்ற பிரதேசங்களில் பின்வரும் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
Ø காத்தான்குடி ஆற்றங்கரை கொங்கிறீற்று வீதியிடலுக்கு ரூபா பதினைந்து இலட்சம்
Ø பாலமுனை மரிக்கார் வீதி கொங்கிறீற்று வீதியிடலுக்கு ரூபா பதினைந்து இலட்சம்
Ø பாலமுனை ஹசனாத் வீதி கொங்கிறீற்று வீதியிடலுக்கு ரூபா பதினைந்து இலட்சம்
Ø கீச்சாம்பள்ளம் முஸ்லிம் மையவாடி சுற்று மதில் அமைத்தல் ரூபா பதினைந்து இலட்சம்
Ø காங்கேயனோடை பொது விளையாட்டு மைதானத்துக்கு சுற்று மதில் மற்றும் வேலி அமைத்தல் ரூபா பதினைந்து இலட்சம்
மேற்படி வேலைத்திட்டங்கள் உடனடியாக அமுல்படுத்தப்படுவதற்கான மதிப்பீட்டு வேலைகள் தொடர்பில் இன்று(15/11/2017) காத்தான்குடி, மன்முனைப்பற்று பிரதேச செயலாளர்களை நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் சந்தித்து கலந்துரையாடியதுடன் வேலைத்திட்டங்களுக்கான அனுமதிக்கடிதங்களையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
