தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும்




வாழைச்சேனை முர்சித்-

ட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் பிரதி தலைவருமான நா.திரவியம் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் தலைமையில் கறுவாக்கேணி சமூக சேவைகள் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் என்பதில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மாற்றுக் கட்சிகளோடு இணைந்து போட்டியிடுவார்களா? அல்லது எந்த கட்சியோடு இணைவார்கள் என்று இப்போது எல்லோர் மனதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் கட்சி யாருடனும் இணைந்து போட்டியிடாது.

இதற்கு முன்னர் நாங்கள் எந்தக் கட்சிகளோடும் சேர்ந்து இருந்தாலும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் தனித்தே போட்டியிடும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இரண்டாக பிரிந்து விட்டது என்று பலர் பேசுகின்றார்கள் அவ்வாறு எப்போதும் இடம்பெறாது என்றார்.

இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், சமூக சேவை உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன் மற்றும் நா.திரவியம் ஆகியோரது கிழக்கு மாகாண சபையின் பன்படுகப்படுத்தப்பட்ட மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியில் இருந்து எட்டு பேருக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் இரண்டு பேருக்கு மா அரைக்கும் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -