ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் இன்று (25) திருகோணமலை ஏகம்பரம் விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மொத்தமாக 1119 பட்டதாரிகளூக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன .தமிழ் மொழி மூலமான 937,சிங்கள மொழி 168,ஆங்கிலம் 14 பேர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னால் மாகாண சபை அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் முப்படை அதிகாரிகள்,உயரதிகாரிகள்,ஏனைய அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




