காற்றும் மழையும்

Mohamed Nizous-

கால நிலை மாற
வாழ்வு நிலை மாறும்
கண்டவற்றில் கேட்டவற்றில்
ஒன்றிரண்டை எழுதுகிறேன்

பாடசாலை ரத்து என்று
பரபரக்கும் ட்விட்டர்கள்.
கூடிய மகிழ்ச்சியாலே
குதூகலிப்பார் பிள்ளைகள்.

பேஷ்புக்கில் வெள்ளம்
பீறிட்டுப் பாயும்
வீசுகின்ற காற்றை விட
வேகமாக மெஸேஜ் வரும்

வானிலை உத்தியோகத்தரின்
வாயில் வரும் தமிழ் மொழியில்
பாதி புரியாது
பாடாய்ப் படுத்தி நிற்கும்.

காற்று சுழன்றடிக்கும்
கரண்ட் கட்டாகும்
வீட்டில் மெழுகுவர்த்தி
வேகமாகத் தேடப்படும்

உடைந்து போன குடைகள்
ஒழுக ஒழுக பிடிக்கப்படும்
நனைந்து போன முதுகின்
நடுவிலே சேர்ட் ஒட்டும்

ஆட்டோக்களில் பூட்டியிருக்கும்
மீட்டர்கள் மறைக்கப்படும்
கேட்ட தொகை கொடுக்க வேண்டும்
கேள்வி கேட்க முடியாது

லோக்கல் கவர்ன்மெண்ட் கண்டிடேட்
பார்க்க வருவார் பாதிப்பை
ஆட்கள் சேரும் இடம் பார்த்து
ஆரம்பிப்பார் பாண் கொடுக்க

ஆபீஸர் மார்களுக்கு
அடிவயிற்றில் எரிச்சல் வரும்
பாவி இந்த அரசாங்கம்
பாடசாலைக்கு மட்டும் லீவு தாறான்.

மரம் சரிந்து வீதியிலே
மணிக்கணக்கில் தவம் இருக்கும்
சனம் போக முடியாமல்
சங்கடத்தில் மாட்டி நிற்கும்

வெள்ளம் வருமோ
உள்ளம் கவலை கொள்ளும்.
உள்ள துஆவெல்லாம்
ஓயாது ஓதப் படும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -