திருகோணமலை-மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட நாமல்வத்தை பிரதான வீதியை புணரமைத்து தருமாறு அக்கிராமமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மொறவெவ சந்தியிலிருந்து 10 கிலோமீட்டர் செல்லும் நாமல்வத்தை வீதி பல் வருட காலம் திருத்தப்படாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் அவ்வீதியினூடாக அரச பேருந்து கூட செல்ல முடியாத நிலையில் அரச பேருந்து கூட சேவையில் ஈடுபடுத்தப்படவில்லையெனவும் கிராமமக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் கிராமத்திற்கு வருகை தந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தேர்தல் முடிவடைந்தவுடன் வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக நடைபெற்று முடிந்த மூன்று தேர்தலின் போது அரசியல்வாதிகள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்தனர்.
ஆனாலும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதியா ?அல்லது நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வீதியா? அல்லது மொறவெவ பிரதேச சபைக்கு சொந்தமான வீதியா என்ற விடயம் கூட இன்னும் தெரியாத நிலைக்கு திருகோணமலை மாவட்ட அரசியல் வாதிகள் பொய் கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் அக்கிராமமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இம்முறை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக நாமல்வத்தை-மொறவெவ பிரதான வீதியை புணரமைத்து தருமாறும் இல்லாவிட்டால் தேர்தலை பகிஸ்கரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியினூடாக கற்பிணி பெண்களை கூட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதியுறுவதாகவும் இனியாவது இவ்வீதியை புணரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாமல்வத்தை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


