அப்துல்சலாம் யாசீம்-
காத்தான்குடி பத்ரியா வித்தியால புதிய கட்டிட திறப்பு விழா பாடசாலையின் அதிபர் எச்.எம்.மன்சூர் தலைமையில் இன்று (16) பிற்பகல் 2.00மணியளவில் நடைபெற்றது.
அமெரிக்காவின் 95மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத்தினை கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமேரிக்காவின் பசுபிக்கட்டளை பிரிவின் பிரதி தூதுவர் ரொபட் ஹில்டன் கலந்து கொண்டதுடன் பாராளமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ,கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் சிப்லி பாரூக்.கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண பணிப்பாளர் எம்.டி.நிஸாம் மற்றும் திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.