பிற மொழிகளை கற்றுக் கொள்வதன் மூலம் வாழ்வில் பல வெற்றிகளை காணமுடியும் முடியும்-எம்.நாஜீம்









சலீம் றமீஸ்-

ரு மனிதன் தனது மொழியை தவிர்ந்த ஏனைய மொழிகளையும் கற்றுக் கொள்வது முக்கியமானது. உலகில் எங்கு சென்றாலும் தான் கற்ற மொழி ஊடாக வெற்றிகளை அடைந்து கொள்வான். பிற மொழிகளை கற்றுக் கொள்வதன் மூலம் இன உறவுகளையும் வலுப்படுத்த முடியும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக உப-வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையத்தினால் நடாத்தப்பட்ட கல்விசாரா ஊழியர்களுக்கான சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி பயிற்சி கற்கை நெறியின் இறுதி நிகழ்வு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸில் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே உப-வேந்தர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், எமது நாட்டை பொறுத்தவரையில் மூன்று மொழிகளும் முக்கியமானது. மொழியை நன்கு பேசுவற்கும், எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் தெரிந்து இருக்க வேண்டும். அப்போதுதான் தங்களுடைய தேவைகளை தடையில்லாமல் செய்து கொள்ளமுடியும். அதுமட்டுமல்ல இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, நல்லுறவுகளை சந்தேகமில்லாமல் பேணமுடியும். இந்த நிகழ்வில் தமிழ் மொழி பேசுகின்றவர்கள் கற்றுக் கொண்ட சிங்கள மொழியில் பேச்சு, பாடல், கவிதை, உரையாடல், அறிவித்தல் போன்றவைகளை வெளிப்படுத்தி தங்களது திறமைகளை காட்டினர். அது போன்றுதான் சிங்கள மொழி பேசுகின்றவர்கள் தமிழ் மொழியில் செய்தி வாசிப்பு, பாடல், நாடகம், உரையாடல் போன்றவைகளுடாக தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இந்த விடயங்கள் யாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்று மேலும் மொழிகளை திறன்பட கற்பதற்கு நீங்கள் முயற்சிகளை செய்யவேண்டும்.

இந்த பயிற்சி நெறியினை சிறப்பாக ஏற்பாடு செய்த பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளருக்கு விஷேட நன்றி தெரிவிப்பதுடன், மேலும் வளவாளர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் நன்றிளை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் உபவேந்தர் நாஜீம் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்டிய ஊழியர்களுக்கும், பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற மற்றும் கூடிய வரவையும் மேற்கொண்ட ஊழியர்களுக்கும் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ் நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், இஸ்லாமிய கற்கைகள்அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம்.மஸாஹிர், நிதியாளர் எம்.ஐ.பாஸிலூர் றகுமான், தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் உட்பட உயரதிகாரிகள், நிர்வாக உத்தியோகத்தர்கள், வளவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -