மொனராகலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த பஸ் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாலை 04.30 அளவில் கொடகவெல - பல்லேபெந்த பகுதியில் வைத்து இனம்தெரியாத சிலர், பஸ்ஸை மறித்து சாரதியின் ஆசனத்தை நோக்கி குண்டை வீசிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது, சுமார் 10 பயணிகள் பஸ்ஸினுள் இருந்துள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த பஸ் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -