கிழக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவின்பேரில் உடனடி இடமாற்றங்கள்!


காரைதீவு நிருபர் சகா-

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகல்லாகமவின் உத்தரவின்பேரில் மாகாண பொதுநிருவாக அமைச்சினால் கிழக்கிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் சில அதிகாரிகள் உடனடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காரைதீவு பிரதேசசபைச்செயலாளர் சின்னத்தம்பி நாகராஜா திருக்கோவில் பிரதேசசபைச்செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

திருக்கோவில் பிரதேசசபைச்செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் காரைதீவுப் பிரதேசசபைச்செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

நேற்று இவர்கள் தத்தமது கடமைப்பொறுப்புகளை ஒப்படைத்து கையேற்றனர்.

காரைதீவுப் பிரதேசசபைச்செயலாளராகவிருந்த சி. நாகராஜா கடந்த 28வருடங்களாக அரசேவையில் உள்ளவர். தற்போதுவயது 59. அடுத்தவருடம் ஓய்வுபெறவிருந்தவர்.

காரைதீவு பிரதேசபையில் கடந்த 07வருடங்களாக சேவையாற்றிவருகிறார். இவரொரு சிறந்த கவிஞரும் ஊடகவியலாளருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -