பிரதேசவாதம்: போதையூட்டப்பட்ட ஒரு கொடிய விலங்கு

எஸ். ஸஜாத் முஹம்மத்
anadolu university - turkey

பிரதேசவாதம், பிராந்தியவாதம், பிரிவினைவாதம் என்பன மதுவூட்டப்பட்ட ஒரு கொடிய விலங்கு. மது ஊட்டப்பட்ட விலங்கு தெளிவு நிலைக்கு வரும்வரை எதை சொன்னாலும் செவிடன் காதில் சங்கு ஊதுவதாகத்தான் இருக்கும்.

சில வேலையில் அதற்கு பிடித்துள்ள வெறி மேலும் பன்மடங்கு அதிகரிக்கும். ஏன் எனில் அது தன்னிலையிலில்லை. Abnormal Stage இல் தான் இருக்கும். அதன் புத்தி பேதளிக்கப்பட்டிருக்கும். அதற்கு என்ன அறிவுரை கூறியும் விளங்காது. அது வெறி பிடித்த நிலையில் இங்கும், அங்குமாக அழைந்து திரியும். அது தெளிந்து தனது சுய நிலையை அடைவதற்கு சற்று காலம் எடுக்கும். அதற்கு பின்னர் தான் தன்னுடைய மடமையை உணர்ந்து வருந்தும். காலம் தள்ளி ஞானம் அதற்கு பிடிக்கும்.

நான் எந்த பிரச்சினையையும் ஷரிஆ, ஸிரா(நபி (ஸல்) அவர்களின் வரலாறு ), தாரீஹ்(முன்னைய நபிமார்கள், ஸஹாபாக்கள், தாபியின்கள், தபஊ தாபியின்கள்,உமையா, அப்பாஸி, சிற்றரசுகள், உஸ்மானிய ஆட்சியாளர்களின் வரலாறு அதற்கு பின்னரான நவீன கால வரலாறு) போன்றவற்றுடன் உரசிப்பார்ப்பவன். இவற்றினுடாக கற்ற பாடம் தான் நான் மேலே கூறிய கூற்று. இஸ்லாமிய உம்மாவை காலத்திற்கு காலம் நிலை குனியவைக்கும் தொற்று நோய்தான் இந்த பிரதேசவாதம்.

இஸ்லாம் முஸ்லிம்களை “உம்மத்” என்ற பரந்த கருத்தியலினூடாக ஒன்றிணைக்கின்றது. உம்மத் என்ற விரிந்த கண்ணோட்டத்தை தகர்ப்பதற்காக ஷைத்தானியத்தும் தாஹுதியத்தும் போட்டிபோட்டுக் கொண்டு தினமும் முயற்சிக்கும். இதனால் தான் ஒரு உம்மாவாக இருந்த நாம் இன்று பிரித்தாளும் சக்திகளின் சதியால் பல நாடுகளாக, பல பிராந்தியங்களாக துண்டாடப்பட்டுள்ளோம்.

பிரிவினைவாதம், பிரதேசவாதம், பிராந்தியவாதம், கோத்திரவாதம், மொழிவாதம், இனவாதம், நிறவாதம் என்பவற்றை ரஸுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாவில் தகர்த்தெறிந்தார்கள்.

இஸ்லாம் கிழக்கையும் மேற்கையும் இணைத்தது. அரேபியையும் அஜமியையும் ஒருமைப்படுத்தியது. கோத்திர வெறியில் தலைத்த தலைமைகளை உள்ளங்களால் இணைப்பை ஏற்படுத்தியது.

எமது முஸ்லிம் சமூகம் ஈமான், அகீதா, இபாதத், இமாரத், இகாமாத், கிலாபத் ஊடாக எழும் சகோதர வாஞ்சையூடாக கட்டமைக்கப்பட்டது.

ரஸுல்லாஹ் (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னர் பிரதேசவாதம் முஸ்லிம் சமூகம் நோக்கி படையெடுத்தது. மக்கா, மதீனா வாசிகளுக்கிடையில் மோதுகையை ஏற்படுத்தப் பார்த்தது. இதனை இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள் சகீஃபா பனீ சஃதா வில் குழி தோண்டிப் புதைத்தார்கள். இதற்கு பின்னராக உஸ்மான்(ரலி), அலி(ரலி) அவர்களின் காலத்திலும் உமைய, அப்பாஸிய, உஸ்மானிய ஆட்சியாளர்களின் காலத்திலும் இதற்கு பின்னரான காலத்திலும் முஸ்லிம் உம்மத்தில் ஏற்பட்ட பெரும்பாலான குழப்பங்களுக்கு இது தான் காரணமாக அமைந்தது.

இதன் வடிவம் அரபியர்கள், அஜமியர் என்றும், மக்கியர், மதனியர் என்றும், அரபியர், பாரசிகர் எனவும், சிரியர்கள், ஈராக்கியர் எனவும், எகிப்தியர், துருக்கியர் எனவும் பஞ்சாப்பியர், வங்காளியர் எனவும் மலையர் ஜாவர் எனவும் உருவெடுத்தது.

இந்தியாவில் பாகிஸ்தான் பிரிந்ததாக இருக்கலாம் பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிந்தாக இருக்கலாம் இதில் நன்மையடைந்தது முஸ்லிம் சமூகமல்ல. மூன்றாவது சக்திகள் தான். இதனால் இன்று இரண்டாவது அதிக முஸ்லிம் பரம்பலை கொண்ட இந்திய முஸ்லிம்கள் அந்த நாட்டில் அரசியல் ரீதியாக அநாதையாக்கப்பட்டுள்ளனர். தமது வாழ்வியல் துறைகள் சகலவற்றிலும் புறக்கணிக்கப்பட்ட இரண்டாம் நிலை சமூகமாக மாறியுள்ளனர்.

இந்த நிலையை நோக்கிதான் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலவியல் பயணிக்கின்றது. இதற்காக எமது நாட்டில் சர்வதேச சதிகார ஏஜண்டுகளின் உதவியுடன் மிகவும் நுணுக்கமாக திட்டமிடப்பட்டு நகர்வுகள் நடக்கின்றன.

எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் தவிர்ந்த ஏனைய பௌத்த, இந்து, கிரிஸ்தவ, மலையக சமூகங்கள் தமது இருப்பியலிலும் தமது வாழ்வியலிலும் தெளிவாக இருக்கின்றன. எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ அதை உறுதியாக செய்கின்றன. தமது பிரச்சினைகளை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் எடுத்துச் சென்று வெற்றியடைந்துள்ளன. தமது சமூகம் மீதான தேசிய, சர்வதேச சமூகங்களின் கவனம் திசைதிரும்பாமல் இருப்பதற்காக தினமும் முயற்சிக்கின்றன. ஆனால் எமது முஸ்லிம் சமூகம் மாத்திரம் அன்றும், இன்றும் தாடுமாரிக் கொண்டுதான் இருக்கின்றது.

எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதம் இன்று கட்சி, நிர்வாக மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்டு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயற்படுகின்றது. சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை இலக்காக கொண்டு குடியேற்றத் திட்டங்கள் பலதும் மேற்கொள்ளப்படுகின்றது. பெளத்த தலைமைபீடங்களும் அன்று முஸ்லிம்களுக்கு சார்பாக பேசியவர்களும் பேரினவாதத்திற்கு நியாயம் கற்பிக்கின்ற போக்கும் தற்போது காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் இருப்பியல் சிங்கள, தழிழ் நிர்வாக பயங்கரவாதத்தால் இன்று கேள்விக்குள்ளளாக்கப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பியலின் தடையங்கள் திட்டமிடப்பட்ட அடிப்படையில் அழிக்கப்பட்டுள்ளது அல்லது மறைக்கப்பட்டுள்ளது.

இன்று ஆட்சிபீடத்திலுல்ல நல்லாட்சி அரசாங்கம் என தன்னைக் கூறிக்கொள்ளும் அரசாங்கத்திற்கு முஸ்லிம் சமூகம் தமது வாக்கு வங்கியில் இருந்து 95 வீதமான பகுதியை அன்று தாரைவாத்தது. ஆனால் இந்த அரசாங்கம் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம், தேர்தல் முறை சீர்­தி­ருத்தம், எல்லை மீள்­நிர்­ணயம் போன்றவற்றின்னூடாக இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் இருப்பியலை கோள்விக்குள்ளாக்கியுள்ளது.

தேசிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்த்துவாகவும் சர்வதேச சமூகத்தையும், சதிகார ஏஜன்டுகளையும், தமிழ் டயஸ்போரவையும் திருத்திப்படுத்துவதற்காக முஸ்லிம் சமூகத்தின் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ரா­கவும் வடகிழக்கை இணைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முறை சீர்­தி­ருத்தம், எல்லை மீள்­நிர்­ணயம் ஊடகாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவததை குறைக்கும் முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இரண்டு, மூன்று பிரதேச சபைகளை முஸ்லிம்களுக்கு வழங்கினால் போதும் அவர்கள் அதைத்தான் கோருகின்றார்கள். வட, கிழக்கு இணைப்புக்கு அவர்கள் எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை என்பதை தான் இன்று எமது நாட்டில் உள்ள அரசியல் தலைமைகளும் மக்களும் விளங்கி வைத்துள்ளனர். இதைதான் தேசிய, சர்வதேச சமூகங்களுக்கு எடுத்துச் செல்லவும்முள்ளனர். இதற்கு ஏற்றால் போல் சான்று பகிரும் வகையில் அன்மைக்கால எமது செயற்பாடுகளும் அமைந்துள்ளன.

வட, கிழக்கு இணைப்பு தொடர்பாக முஸ்லிம்களின் நிலைப்பாட்டை உருதியாகவும், தெளிவாகவும் தேசிய, சர்வதேச சமூகங்களுக்கு முன்வைக்க வேண்டிய காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

இந்த இணைப்பினுடாக வடக்கிளும் கிழக்கிளும் வாழும் முஸ்­லிம்கள் மென்­மேலும் சிறு­பான்­மை­யாக்­கப்­ப­டு­வ­தோடு, அதி­கா­ர­மற்ற அப­லை­க­ளாக மாற்­றப்­படும் ஆபயம் ஏற்பாடும் என்பதை நாம் எமது சமூக, அரசியல் தளங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். இது தொடர்பாக சமூக மட்டத்தில் விழிப்புணர்வூகளையும் கருத்தாடலையும் எதிர்பினையும் வெளிப்படுத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் தற்போது இருக்கின்றோம்.

எமது நாட்டில் சமகாலத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளன, நடக்கவுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்ற மாற்றங்களின் போது முஸ்லிம் சமூகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக முயற்சிகள் பலவும் நடந்துள்ளன. இன்றும் நடக்கின்றன. அந்த முயற்சிகளின் ஒன்றுதான் இந்த கல்முனை, சாய்ந்தமருது பிரிவினை வாதம். இந்த பிரிவினை வாத தீயை மூட்டி இதில் மூன்றாம் தரப்பினர் குளிர் காய்ந்து கொண்டுள்ளனர். பற்றி எரிகின்ற நெருப்புக்கு எரிபொருள் ஊற்றி விரகு போடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவுகளை தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.

இவ்வாறு இருந்தும் இன்று சமூகத்தை ஒருமைப்படுத்தி நேரிய பதையில் வழிகாட்ட வேண்டிய உலமாக்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல், சிவில் தலைமைகள் பிரிவினைவாத அரசியல் செய்கின்றன. இதற்கு பலிபீடமாக அல்லாஹ்வை தொழும் பள்ளிவாசல் மாற்றப்பட்டுள்ளன. மீம்பர் மேடைகள் பிதேசவத தீயை மூட்டும் தளமாக மாற்றப்பட்டுள்ளன. இதற்காக தொழுகை, நோன்பு போன்ற உயரிய இபாதத்கள் அடமானம் வைக்கும் அளவுக்கு எமது கல்முனை மாநகர சமூகம் தல்லப்பட்டுள்ளது. எம்மீது பிற பிரதேச முஸ்லிம் சமூகமும் ஏனைய தேசிய, சர்வதேச சமூகங்களும் காரி உமிலும் அளவுக்கு கேவலங்களாக ஆக்கப்பட்டுள்ளோம்.

எமது கல்முனை மாநகர சமூகம் இலங்கையில் வாழ்கின்ற ஏனைய முஸ்லிம் சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் படித்த சமூகம் தான். இவ்வாறு கற்ற எம்மவர்களில் பெருவாறியானவர்கள் வெறும் அறிவை மாத்திரம் சுமந்தவர்களாகவுள்ளோம். இன்னும் ஒரு பக்கம் எமது மனப்பாங்கில், திறனில், முதிர்ச்சி நிலையில் மாற்றத்தை வேண்டியவர்களாகவுள்ளோம். இந்த மாற்றம் எடுக்க எத்தனை தசாப்பதங்கள் நூற்றாண்டுகள் தேவையோ என்று எனக்கு தெரியவில்லை. எம் மீது நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த பிரதேசவாத பிரிவினை மதுவுக்கு திணிக்கப்பட்டுள்ளோம்.

தம்மை கற்றறிந்த மேதைகளாக அலங்கரித்துக் கொள்ளும் சில புத்தீஜீவிகள் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பர்ளுஐய்னான பணியை புறக்கணித்து தமது கடமையான அமானிதமான நேரத்தில் இன்று முகநூலில் அரட்டையடித்துக் கொண்டும் தமது பணியை துஷ்பிரயோகம் செய்து கொண்டும் இருக்கின்றனர். இந்த அமானிதம் பேனாத மேதவிகள் எல்லாம் எமது சமூகத்தை வழிநடத்த போனால் எமது சமூகத்தின் நிலைதான் என்ன?

மக்களை மிகவும் விரைவாக ஒரு பொது தளத்திற்கு எடுப்பதற்கு மிகவும் இலகுவான வழி அவர்கள் மீது பிரதேசவாத பிரிவினைவாத உணர்வுகளை திணிப்பதுதான். அதற்கு ஊடகமாக கற்ற மேதாவிகள் காலத்திற்கு காலம் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகள் நிறைவடைந்த பின்னர் இந்த மேதாவிகள் தம்மை தலைமைகளாக அலங்கரித்துக் கொள்வதற்காக தமக்கிடையே போட்டி போட்டுக் கொண்டு சமூகத்தை மேலும் பல கூறுகளாக பிரித்துவிடுவார்கள். இதன் உண்மைதன்மையை வரலாற்றை ஆழமாக கற்கின்ற போது தெறிந்து கொள்ள முடியும்.

இந்த தொற்று நோய் நேற்று பிரிவினைவாத்திற்கு எதிராக பேசியவர்களை இன்று சார்பாக பேசவைத்தது மாத்திரமல்லாது அவர்களை பித்து பிடிக்கச் செய்து அலக்களிக்க வைத்துள்ளது.

சமூகம் எவ்வாறோ முடியும் (அதன் தலைவரும்) அவ்வாறு இருப்பார் என்று ஒரு கூற்றுவுள்ளது. அவ்வாறே எமது சமூகமுமுள்ளது, அரசியல் தலைமையுமுள்ளது. என்னைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளை மாத்திரம் விமர்சிப்பதில் நியாயமில்லை.

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்ற அரசியல் ரீதியான அதிகாரத்தை தன்னகத்தே பெறக்கூடிய ஒரே பிராந்தியம் கல்முனை மாநகரம். இதில் நிகழ்கின்ற மாற்றம் முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும் என எம்மை விட ஏனைய சமூகத்தவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

நான் எங்கள் தேசம் பத்திரிகையில் வேலைசெய்த போது நேர்காணல் கண்ட தமிழ் சமூகத்தை செர்ந்த நடுநிலையாக சிந்திக்கின்ற ஒரு முத்த பேராசிரியர் ஒருவர் என்னிடம் இது தொடர்பாக குறிப்பிட்டார்.

தமிழர்களின் அரசியலை யாழ்பணத்தை வைத்து பார்பது போல் நாம் முஸ்லிம்களின் அரசியலை கல்முனையை மையமாக கொண்டு பார்கின்றோம் என மூத்த தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் என்னிடம் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களின் அதிகார அலகு கல்முனை என்று கூறுகின்றிர்கள். ஏன் அதை இப்போது கூறு போடப்போகின்றிர்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதாக எனது சேவி வழியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தான் முஸ்லிம் சமூகதை பலவினப்படுத்த காழ்புணர்ச்சி கொண்ட பிரித்தாலும் இனவாத முகாங்கள் முயற்சிக்கின்றன.

1987 ஆம் ஆண்டு கல்முனை மாநகரம் ஒரு பட்டின சபையையும் மூன்று கிராம சபைகளையும் ஒன்றினைத்து உருவாக்கப்பட்டதில் சாய்ந்தமருது மக்கள் மாத்திரம் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது ஒரு மயை. எதிர்கால அரசியல்வாதிகளாக தம்மை அழங்கறித்துக் கொள்ள எத்தனிக்கும் குழ்லை நரி மேதாவிகளால் சோடித்துவிடப்பட்ட கருத்தியல் மயை தான் இது.

கல்முனை மாநகரம் உருவாக்கப்பட்டதில் குறித்த ஒரு சமூகமோ அல்லது ஒரு பிரதேச மக்களோ மாத்திரம் பாதிக்கப்படவில்லை. கல்முனை மாநகர எல்லைப்பரப்பில் வாழ்கின்ற முஸ்லிம், தமிழ், கிரிஸ்தவ சமூகங்களையும் சேர்ந்த அனைத்து ஊர் மக்களும் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக கல்முனை மாநகரம் உருவாக்கப்பட்டதில் பிளை என்று நான் இவ்விடத்தில் விவாதிக்கவில்லை. கல்முனை மாநகரம் ஓர் உயரிய நோக்கில் அன்றை வர்த்தக வாணிப அமைச்சர் மர்ஹஹும் கலாநிதி அப்துல் ரசாக் மன்சூர் அவர்களின் முயற்சியால் ஒன்றினைத்து உருவாக்கப்பட்டது. கல்முனை மாநகரை கிழக்கு இலங்கையின் வர்த்தக நகராக மாற்றுவதாற்காக இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது்.

இது ஒரு குறிப்பிட்ட ஊர் நலன் பேறுவதற்காவே அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகம் மாத்திரம் இலாபமிட்டுவதற்காக மாத்திரம் உருவாக்கப்படவில்லை. கிழக்கு வாழ் மக்களின் நலனை மையமாகக் கொண்டு தான் உருவாக்கப்பட்டது.

பலவந்தமாக பிரித்து எடுத்தார்கள், எம்மை அடிமைப்படுத்தியுள்ளார்கள், எங்களின் உரிமைகளை மறுக்குகின்றார்கள், புறக்கனிக்கார்கள், சூழ்சி செய்கின்றார்கள், என்ற அப்பட்டமான அறிவினமான அவதுறுகளை செல்வதை முதலில் நிறுத்துங்கள். அறிவை, மனசாச்சியை அடகு வைத்து காழ்புணர்சித்தனமாக அறிக்கைவிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் உங்களின் ஒவ்வொரு அவதுருக்கும் நீங்கள் அவனிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவனிடம் இதற்காக பவமன்னிப்பு தெடுங்கள்.

கல்முனை வாழ் முஸ்லிம் சமூம் யாருடைய உரிமையும் பரித்தேடுக்கவில்லை. யாரையும் அடிமைப்படுத்தவில்லை. மாநகரம் உருவான பின்னர் ஆட்சியை கைபற்றி அரசியல் தலைமைகள் விட்ட தவறுக்காக கல்முனையின் முழு சமூகத்தையும் பலிக்கடவாக்க வேண்டாம்.

கையாலாகாத, ஆழுமையாற்ற, தூர நோக்கு சிந்தனையறற் அரசியல் தலைமையை தெறிவு செய்தது கல்முனை வாழ் மக்கள் மாத்திரமல்ல. கல்முனை மாநகரில் வாழ் மக்கள் நாங்கள் அனைவரும் ஒன்றினைந்துதான். நாம் விட்ட தவறுக்கு நாம் அனைவரும் பதில் செல்லவேண்டும் ஒரு ஊரை மாத்திரம் பலிபீடம் எற்றுவது என்ன நியாம்.

இந்த கையாலாகாத அரசியல் தலைமைகள் கல்முனை வாழ் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் மத்தியில் நிரந்தர பகையை ஏற்படுத்தியுள்ளன.

கல்முனையான், சாய்ந்தமரத்தான், மருதமுனையான், பண்டிருப்பான், நாட்பட்டிமனையான் என்று யோசிக்காமல் எல்லை கொடுகளுக்கும். இன ரீதியான பாகுபாடுகளுக்கும் அப்பால் ஏன் எம்மால் யோசிக்க முடியாதுள்ளது. இவ்வாறு யோசித்தால் நாம் அடைந்த பயண்தான் என்ன?

எமக்கு இன்றைய தேவை ஐம்பது நூறு வேலைவாய்ப்புக்களும் இரண்டு மூன்று குப்பை மிசின்களும் ஒர் இரண்டு கட்டிங்களும் ஐந்து பத்து இருக்கைகளுமல்ல. நாம் அனைவரும் ஒன்றினைந்தால் எமது மாநகர எல்லைக்குள் பல்நூறு தொழில் வாய்புக்களையும், பல பல் தேவைகட்டிங்களையும் மாத்திரம் மன்றி புதிய தலைமுறையினரையும் அல்லாஹ்வின் அருளால் உருவாக்க முடியும்.

கல்முனை மாநகருக்கு இன்றுள்ள தேவை விவேகமுள்ள, சயோசனமாக செயற்படக் கூடிய, அழுமையுள்ள, சகவாழ்வையும், நல்லாட்சியையும் உறுதிப்படுத்தக்கூடிய புதிய மாற்றுத்தலைமைதான். பிரதேசவாதத்திற்காக நாம் ஊர் ரீதியாக ஒன்றினைகின் போது எம்மை ஆழுகின்ற தலைமை உருவாக்குவதற்காக ஏன் நாம் அனைவரும் ஒன்றினைய முடியதுள்ளது.

சமூக தலைமைகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் மக்களின் கடிவாளம் உங்கள் மீது சாட்டப்பட்டுள்ளது. அந்த கடிவாளத்தை கொண்டு உங்களுடைய சுய இலாபத்திற்காக பொது மக்களை படு குழியில் தள்ளி விடாதீர்கள் நாளை மறுமையில் மஃஸர் வெளியில் உங்களுடைய பாதங்கள் நகராது உங்களால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியாது உங்களுயை கடிவாளத்தில் உள்ள சேனங்களாக உள்ள கல்முனை மாநகரில் வாழுகின்ற எங்கள் ஒவ்வொறுவர் பற்றிய கேள்வியும் உங்கள் மீது சாட்டப்படும் எங்கள் சமூகத்திற்கு நீங்கள் இழைத்த அநீதிகள் பற்றி விசாரிக்கப்பட இருக்கின்றீர்கள்.

அல்லாஹ் எங்களையும் பாதுகாத்து எங்களுடைய பாவத்தை மன்னிக்ப் போதுமானவன்.

நான் யாருடைய மனதையும் நோகடிக்கும் வண்ணம் இந்தப் பதிவை இடவில்லை அல்லாஹ் எனக்குத் தந்த சொற்பமான சிந்தனையில் இருந்து தான் சிறிது பகிர்ந்து கொள்கின்றேன்.

பிரிவினை கோடுகளை தகத்து, உள்ளங்களால் இணைவோம். சமூககட்டுமான, தேச நிர்மான பணியில் ஒருமித்து செயற்படுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -