நீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை.

பைஷல் இஸ்மாயில் -

நீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்முனை மத்தியட்ச சபையின் உறுப்பினரும் முஸ்லிம் விவாகப் பதிவாளருமாகிய எம்.எஸ்.முஹ்மூத் லெப்பை இன்று (23) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்பயிற்சி நெறிக்கான கடிதங்கள் யாவும் நேற்றைய தினம் (22) கல்முனை பிரதேச செயலாளர் முஹம்மட் ஹனியினால் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பயிற்சி நெறியானது எதிர்வரும் 27 ஆம் திகதி இருந்து எதிர்வரும் மாதம் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை குறித்த 5 நாட்களிலும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்களிடத்தில் ஏற்படுகின்ற பிணக்கு, தகராறு, நீதி மன்றத்தினால் அனுப்பி வைக்கப்படுகின்ற வழக்கு, ஒருவருக்கொருவர் இடையில் உண்டாகும் முரன்பாடுகள் போன்ற பிரச்சினைகளுக்கு எந்த வகையில் சுமுகமான இணக்கப்பாட்டினை வழங்கி வைப்பது பற்றி இப்பயிற்ச்சிப் பட்டறை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -