35 மில்லியன் செலவில் சாய்ந்தமருதில் அபிவிருத்திப்பணி!!


எம்.வை.அமீர் -

கர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சினூடாக சாய்ந்தமருதில் முன்னெடுக்கப்படும் பாரிய தோணா அபிவிருத்தித் திட்டத்தின் முதாலம் கட்ட இரண்டாம் பிரிவு வேலைத்திட்டம் 35,334,500.00 செலவில் 2017-11-05 ஆம் திகதி ஆரம்பமாகியது.

2016.10.11 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைவாக சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்காக 16 கோடி 20 லட்சம் ரூபாய்களை செலவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதில் கடந்த ஆண்டு 29,997,750.00 ரூபாய்கள் செலவு செய்து குறிப்பிட்ட தூரங்களுக்கு இரு மருங்கிலும் கல் சுவர்கள் அமைக்கப்பட்டன. இதன் அடுத்த கட்ட பணிகளுக்கே மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை காணிமீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டம் இவ்வருட இறுதிக்குள் நிறைவுபெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -