க.கிஷாந்தன்-
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அட்டன் பிரதான வீதியின் தெஹியோவிட்ட மாகம்மன பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து 27.11.2017 அன்று பகல் 2.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து அட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் பேரூந்து சாரதி உட்பட 23 பேர் காயமடைந்த நிலையில், கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


