ஆவா குழுவில் 23 வயது முஸ்லிம் இளைஞன் ஒருவன் யாழ். பொலிஸாரினால் கைது

யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவில் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் 23 வயது முஸ்லிம் இளைஞன் ஒருவன் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையையடுத்து ஆவா குழு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஆவா குழு தலைவரின் வாக்கு மூலத்தையடுத்தே இந்த முஸ்லிம் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குழுவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த இளைஞன் கைது செய்யப்பட்டது முதல் நேற்று (24) காலை வரையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் உயர் பொலிஸ் அதிகாரிகள் ஊடாக இவனை விடுவிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் சகோதர மொழி தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.

இந்த முஸ்லிம் இளைஞன் மாத்திரமா? அல்லது இன்னும் முஸ்லிம்கள் இதனுடன் தொடர்பா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.DC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -