கிண்ணியா பிரதேச கலை இலக்கிய அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழா நேற்றைய தினம் (18.11.17) வெகு விமர்சையாக தி/கிண்ணியா மத்திய கல்லூரி கேட்போர்கூட அப்துல் மஜீத் கலையரங்கில் இடம்பெற்றது.
கிண்ணியாவின் கலை, கலாச்சார மற்றும் பாரம்பரியங்களை பரைசாட்டும் பல சிறப்பான நிகழ்ச்சிகள் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டது.
இதில் பிரதேச கலை, இலக்கியத்திற்கு பங்காற்றிய பல கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வு பிரதேச கலை இலக்கிய அதிகாரசபையின் தலைவரும் பிரதேச செயலாளருமான திரு.எம்.ஏ.அனஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின மாகாண பணிப்பாளர் திருமதி. வளர்மதி ரவீந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் விஷேட விருந்தினர்களாக கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. முனவ்வரா நளீம், கிண்ணியா தல வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் (MS) திரு. சதீஸ்குமார், சுகாதார வைத்திய அதிகாரி திரு. ஏ.எம்.எம்.அஜீத் கிண்ணியா பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் செல்வி. ஜீ. பவதாரணி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஏ.எஸ்.எம்.ரியாத், கிண்ணியா பிரதேச சபை செயலாளர் திரு. அஸ்வத் கான், பிரதேச செயலக ஊர்ழியர்கள், பிரமுகர்கள், கலைஞர்கள் இன்னும் ஏராளமானோர் க லந்து சிறப்பித்தனர்.
இவ்வாறு சிறப்பாக இது நடைபெற்றாலும் கூட கிண்ணியா பிரதேச ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படாமையும் ஊடகவியலாளர்களுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஏன் ஊடகவியலாளர்கள் கலை இலக்கிய துறைக்குள் வரமாட்டார்களா?எனவும் தொடர்ந்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் வருடா வருடம் புறக்கணிக்கப்படுவதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.





