137 மில்லியன் ரூபா அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் ஒதுக்கீடு

பைஷல் இஸ்மாயில் -அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு சுமார் 137 மில்லியன் ரூபா நிதியினை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளதாகவும், இவ்வாறானதொரு பெருந்தொகையான நிதி கிழக்கு மாகாணத்தின் எப்பிரதேசத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி.அன்வர்டீன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திகள் தொடர்பான மக்கள் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (11) அக்கரைப்பற்று 06 ஆம் பிரிவில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

எவ்வித அரசியல் அதிகாரங்களும் இல்லாமல்தான் நான் இந்த நிதிகளைக் கொண்டு வந்து பல அபிவிருத்திப் பணிகளைச் செய்து வருகின்றேன். மத்திய அரசோடு இருந்து கொண்டுதான் எமது பிரதேசத்துக்கான அபிவிருத்திகளையோ அல்லது இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களையோ பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நல்லாட்சியை எதிர்த்து செயற்பட்டால் எமது பிரதேசத்திலுள்ள குப்பைகளை அகற்றுவதற்குக் கூட நிதிகளைக் கொண்டு வரமுடியாத நிலைமை போய்விடும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. முஸ்லிம் அரசியல் கட்சிகள் எல்லாம் உரிமை என்ற கோசத்தை வாய்ப் பேச்சளவில் மட்டும்தான் பேசி வருகின்றார்களே தவிர, செயலளவில் செய்து காட்டியவர்கள் இங்கு யாருமில்லை.

வட்டமடு, நுரைச்சோலை போன்ற பிரச்சினைகள் பல ஆண்டுகாலமாக இருந்து வருகின்றன. இதற்கான எந்தத் தீர்வினையும் எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சிகளினாலும் இதுவரைக்கும் பெற்றுக்கொடுக்கவுமில்லை, பெற்றுக் கொடுக்கப்போவதுமில்லை. அவர்களால் இதற்கு ஒருபோதும் எந்தத் தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க முடியாது. இதற்கான சரியான தீர்வுகளை பெற்றுக்கொள்வதாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும். அதற்கான அதிகாரங்களை எங்களிடத்தில் தாருங்கள்.

எந்த அதிகாரங்களும் இல்லாமல் பல மில்லியன் ரூபா நிதிகளைக் கொண்டுவரும் எங்களுக்கு மாநகர சபையின் அதிகாரங்களை எங்களிடத்தில் வழங்குவீர்களானால் இன்னும் பல கோடிக்கணக்கான நிதிகளைக் கொண்டு வந்து பற்பல அபிவிருத்திகளையும், இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -