குவைத்தில் 13ம் ஆண்டு மீலாது உள்ளிட்ட ஐம்பெரும் விழா -

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்யும் 13ம் ஆண்டு மீலாது விழா நிகழ்ச்சிகள் எதிர்வரும் நவம்பர் 30, 2017 வியாழன் அன்று குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் தொடக்க நிகழ்ச்சியாக நடைபெற உள்ளன. வெள்ளிக்கிழமை (01/12/2017) அன்று நண்பகல் நிகழ்ச்சி அதே பள்ளிவாசலிலும், மாலையில் ஐம்பெரும் விழா ரவ்தா பகுதியில் உள்ள ஐம்இய்யத்துல் இஸ்லாஹ் அரங்கத்தில் நடைபெறும். சனிக்கிழமை (02/12/2017) அன்று ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் நிறைவு விழா நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பேராசிரியர் மவ்லவீ பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவீ மற்றும் நெல்லை, கல்லிடைக்குறிச்சி மதரஸா தஃலீமுல் குர்ஆன் அரபுக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மவ்லவீ எஸ். ஸதக்கத்துல்லாஹ் பாகவீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்ற உள்ளனர்.


குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் 13ம் ஆண்டு சிறப்பு மலர், 2018ம் ஆண்டு வருட நாட்காட்டி & திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளியீடு, பள்ளி மாணவ, மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள், களப்பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் என பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


பெண்களுக்கு தனியிட வசதி, விசாலாமான வாகன நிறுத்துமிடம், இரவு நிகழ்ச்சிகளில் உணவு ஏற்பாடு என்று மூன்று நாட்கள், நான்கு இடங்களில் தொடராக நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் குவைத் வாழ் தமிழ் உறவுகள் மத, இன, நாடு பாகுபாடின்றி திரளாக கலந்து கொள்ள வேண்டும் என குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.


மேலதிக விபரங்களுக்கு... https://www.facebook.com/q8tic/posts/1745448112195683




--------------------------------------------------

தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

குவைத்.




துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482

ட்விட்டர் & நேரலை : @q8_tic


மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com


இணையதளம் & நேரலை (Live) : www.k-tic.com

முகநூல் (Facebook) பக்கம் & நேரலை : https://www.facebook.com/q8tic


முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic

நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live

ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) & நேரலை : www.youtube.com/user/Ktic12



யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -