கிழக்கு மாகாண சபை வீடமைப்பு அதிகார சபைத் தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.ஹமீட், சுற்றுலா அபிவிருத்தி தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளராக இருந்த ஏறாவூரைச் சேர்ந்த எஸ்.எம்.சறூஜ், தனியார் போக்குவரத்து அதிகாரசபை தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சமந்த அபே விக்ரம ஆகிய மூன்று தவிசாளர்களே அதிரடியாக முன்னறிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது சம்மந்தமாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் அதாவது முன்னாள் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட தவிசாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இம்போட்மிரர் செய்திப்பிரிவு கேட்டபோது:
எந்த முன்னறிவித்தலும் இல்லாமல் பதவி விலக்கப்பட்டுள்ளோம் எந்த அறிவித்தலும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
எதுஎவ்வாறாயினும் ஆளுநர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தத்துணிவில் நல்ல சேவைகளை கிழக்கு மக்களுக்காக செய்ய வேண்டும் என்பதே எமது கோரிக்கையுமாகும்.
