எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை ,களுவாஞ்சிக்குடி தரம் 10 மாணவர்களின் ஆங்கில இலக்கிய மன்றம் ஒழுங்கு செய்திருந்த வருடாந்த ஆங்கில தினவிழா நிகழ்வுகள் அண்மையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் மாணவர்களினால் ஆங்கில பேச்சு நாடகம் பாடல் விவாதம் கவிதை போன்ற பல நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.
பாடசாலை ஆங்கில ஆசிரியர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன்எம்.சுவேந்திரராஜா ரீ.ஜனேந்திரராஜா மற்றும் தரம் 10 பகுதித்தலைவர் கே.குமாரசிங்கம் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

