திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பாலையூற்று- பகுதியில் மதில் விழுந்து 09 வயது சிறுவன் இன்று (23)
உயிரிழந்துள்ளதாக பொலிஸார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் பாலையூற்று-முருகங்கோயிலடி இலக்கம் 909 இல் வசித்து வரும் மர்சூக் சாஜித் (09) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது கொய்யா பழம் பரிப்பதற்காக மரத்தில் புதிதாக கட்டப்பட்ட மதிலின் மேல் ஏறிய போது மதில் சிறுவன் மீது விழுந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
