முர்சித்-
மட்டக்களப்பு கொழும்பு பிராதான வீதியில் கறுவாக்கேணி சந்தியில் இன்று திங்கள் கிழமை மாலை 05.30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
திருகோணமலையில் இருந்து அம்பாரை நோக்கி வந்த தனியார் பஸ்சும் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து மீறாவோடைக்குச் செல்வதற்கு கறுவாக்கேணி சந்தியால் திருப்புவதற்கு முயன்ற முச்சக்கர வண்டியில் பின்னால் வந்த பஸ் மோதியதாலயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவருவதாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை அப்பகுதியில் உள்ள சில்லறைக்கடையில் பொருட்கள் வாங்கவதற்காக கடைக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இவ் விபத்தில் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த வீ.ரஜீந்திரன் (வயது – 32) அவரது மனைவி தனுஜா ரஜீந்திரன் (வயது – 27) அவர்களது மகள் தருனிஜா (வயது – 06) என்பவர்களே காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.