இந்த சமூகத்தின் குறிப்பாக எமது கிண்ணியா பிரதேசத்தில் தங்களது கட்சியைப் பலப்படுத்த கடினமுயற்சி எடுக்கின்றீர்கள்.கிழக்கு மாகாணத்தில் உங்களுக்கு மட்டுமல்ல சகல கட்சிக்காரர்களுக்கும் சவாரி செய்வதற்கும் குளிர்காயவும் எமது பிரதேசமே கைகொடுப்பது துரதிஷ்டவசமே.
இருந்தும் முஸ்லீம்கள் சிறுபான்மைக் கட்சிகள்,தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.உங்களுடன் 1998-2000ம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட Muslim Information Centre(MIC) மூலம் தொடர்பாகி தற்போதுவரை ஏதோ ஒருவகையில் அவதானிப்புக்களுடனே உள்ளேன்.
இந்த சமூகத்திற்கு உங்கள் கல்லூரி மூலம் பாரிய பங்களிப்பைச் செய்தீர்கள்.நிச்சயம் இறைவனிடம் நன்மை கிடைக்கும்.இருந்தும் அரசியல் செயற்பாடுகளால் நீங்கள் புரிதல் இல்லாதபோதும் சமூகம் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்பதற்காகவே இதைக் கேட்கிறேன்.
நீங்கள் உங்கள்பக்க நியாயத்தை முன்வைப்பதைவிட மற்றக் கட்சிக்காரர்களை விமர்சிப்பதும் குற்றம் காண்பதுமே அதிகம்.ஆதலால் எமது சந்தேகங்களை உங்களிடம் கேட்கின்றேன். இதற்கான பதில்மூலம் உங்கள் பயணத்தில் நிச்சயம் மாற்றம் உண்டாகும்.
1-கடந்த பொதுத்தேர்தலில் SLMCவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முஸ்லீம் சமூகத்தின் நலன்தொடர்பில் கூறப்பட்டதா?SLMCயுடன் எதற்காக தேர்தல் முடிந்ததும் முரண்பட்டீர்கள்?உங்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்கு SLMC வழங்கிய எழுத்துமூல ஆவணம்?
2-தேர்தல் முடிந்து SLMCதலமையகம் சென்று பிரச்சனையில் கூட ஈடுபட்டீர்கள்.ஆகவே இந்த உடன்படிக்கையை பகிரங்கமாக வெளியிட முடியுமா?அல்லது பகிரங்கமாக சத்தியயமிட்டு மக்களுக்கு கூறமுடியுமா?
3-SLMC தலைவரால் நீங்கள் ஏமாற்றபபட்டீர்களா? அல்லது ஹகீமின் சாணாக்யத்தை உங்கள் துரோகத்தால் தோற்கடிக்க முடியவில்லையா? என்று சமூகம் தெளிவுபெறலாம்.எதிர்காலத்தில் மக்களுக்கு உண்மை தெறியலாம்?
4-உங்களுக்கு தேசியப்பட்டியல் கேட்டு தாருஸலாமில் ஆர்ப்பாட்டம் ஒருபுறம்,ஹிஸ்புல்லாவிற்கு தேசியப்பட்டியல் வழங்கக்கூடாது என்று ஜனாதிபதி மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்.இரண்டிலும் எதனை சமூகத்திற்காக நியாயப்படுத்துகிறீர்கள்?
5-உங்கள் கட்சியில் இருக்கும் நஜாமுஹம்மது வண்டனில் இருந்த காலங்களில் என்ன தொழில் புரிந்தார்.அவரால் நடத்தப்பட்ட இஸ்லாமிய அமைப்பில் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்கள் அவர் இருக்கும்வரை ஒரு உறுப்பினராக வழங்காதவர்.அவர் நாடு திரும்பினாரா?நாடு கடத்தப்பட்டாரா?இவரைப் போன்றவரால் எமது சமூகத்திற்கு எதைச் செய்ய முடியுமென எதிர்பார்க்கிறீர்கள்?
6-நீங்க பிறந்து வளர்ந்த மண் காத்தான்குடியில் 3000வாக்குகளுக்கு மேல் உங்களால் பெறமுடியவில்லை.இந்த நிலையில் எமது கிண்ணியாவின் அரசியலில் என்ன தவறைக் கண்டீர்கள்.எமது ஊரில் பிறந்து அக்கறையுடன் செயற்படும் ஆயிரம் இளைஞர்கள் இருக்கும் போது உங்களுக்கு எதற்காக இந்த அக்கறை??ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.எமது ஊரின் அரசியல் மற்றும் சமூகத்தை வழிநடத்த அல்லது சீரமைக்க உங்களிடம் உள்ள திட்டங்களையும் நோக்கங்களையும் வெளிப்படுத்தலாமே??
சிலதனிப்பட்ட காரணங்களால் பலகேள்விகளை ,,உங்கள் கடந்தகால லண்டன் விஜயம் உற்பட சிலவற்றை தவிர்த்துள்ளேன்.உங்களுக்கு அது தெறிந்திருக்கும்.
6-வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களின் பதவிக்காலம் இரண்டரை வருடங்கள் மாத்திரம் என ஏதேனும் உடன்படிக்கைகள் அவரோடு மேற்கொள்ளப்பட்டதா? ஆம் எனில் அதனை வெளிப்படுத்த முடியுமா?
பதவி மீளழைப்பு தொடர்பில் அஸ்மின் ஏதேனும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளாரா? ஆம் எனில் அதனை வெளிப்படுத்த முடியுமா?
மீளழைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்ட சபையில் அஸ்மின் பிரசன்னமாகியிருந்தாரா? அவர் எத்தகைய கருத்துக்களை அச்சமயத்தில் முன்வைத்தார்?
மீளழைத்தல் தொடர்பில் அஸ்மின் அவர்கள் ஏதேனும் நிபந்தனைகளை முன்வைத்தாரா? அவை எவை? அத்தகைய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதா?
7-கடந்த மாகாணசபைத் தேர்தலில் TNAயுடன் வடமாகாண முஸ்லீம்கள் மீள்குடியேற்றம்,வடகிழக்கு இணைப்பு மற்றும் அதிகாரபகிர்வு தொடர்பில் செய்த ஒப்பந்தத்தை பகிரங்கமாக வெளியிடமுடியுமா?
கடந்த மாகாணசபைத் தேர்தலில் TNA மற்றும் வெளிநாட்டு சதியில் சிக்குண்ட நீங்கள் செய்த துரோகத்தால் சொற்பளவிலான வாக்குகளால் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாவது முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழந்தோம்.அத்துடன் சொற்ப வாக்குகளால் சுயேட்சை சிங்கள உறுப்பினர் வெற்ற பெற்றது ஞாபகமுள்ளதா? முழுக்கிழக்கு மாகாணத்தில் TNAவுடன் சேர்ந்து செய்த துரோகத்திற்கு கிடைத்த பரிசுதான் வடமாகாண உறுப்பினர் அஸ்மி.அவர்கூட இன்று உங்களுடன் இல்லை.
8- கடந்த பொதுத்தேல்தலில் SLMCதலமையின் சதிக்கு உற்பட்ட நீங்கள் ஒருபிரதேசசபை உறுப்பினல் கூட இல்லாத எமது மாவட்ட பொதுத் தேர்தலில் போட்டியிட்டீர்கள்.மூதூர் மக்களை பிளவுபடுத்தி,பிரதேசவாதம் உண்டாக்கி இறுதியில் தௌபீக்கிற்கு துரோகம் செய்து ,எமது பிரதேசத்துக்கான பிரதிநிதியை தோற்கடித்தீர்கள்.இதற்காக தேசியப்பட்டியல் கேட்டு சண்டையிட்டீர்கள்.இறைவன் அருளால் தௌபீக் மீண்டும் உறுப்பினரானர்.
உங்கள் பதவிக்கும்,விஷப் பரீட்சைக்கும்,வெள்ளோட்டத்திற்கும் எங்கள் மாவட்ட முஸ்லீம்கள் வாக்குகளை பிரித்தாழ்வதும்.முரண்பாடுகளை உருவாக்குவதும் நியாயமா??
இருந்தும் SLMC மற்றும் ACMCயிடம் மக்கள் இதுபோன்ற தெளிவைப் பெறாத காரணத்தினாலே,இன்று கைசேதப்பட்டதாக உணரவேண்டி உள்ளது.
உங்களை காயப்படுத்தும் நோக்கில் இல்லாமல்,உங்கள் முலம் தெளிவுபெறவே இந்த பதிவை இடுகிறைன்.நிச்சயம் உங்கள் பதிலுக்காக காத்திருப்போன்.
வஸ்ஸலாம்
Fahmy Mohamed-UK
Tel:00447870763570
Email:mbmfahmy@yahoo.com
