இலங்கைப் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் HNDA பட்டமானது பொதுவர்த்தகப் பட்டதாரி பட்டத்திற்கு சமனானது என 2015.10.05ம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் படி அங்கீகரிக்கப்பட்டிருந்து ம் தற்போதைய அரச நியமனங்களின் போது நீங்கள் இதற்கு தகுதியற்றவர்கள் - அங்கீகரிக்கப்படவில்லை - உங்களைப்பற்றி விண்ணப்பபம் கோரலின் போது குறிப்பிடப்படவில்லை என மறுப்புத் தெரிவித்து உதாசீனம் செய்யப்பட்டு வருகின்றமை மிகவும் மனவேதனை அளிக்கின்றது.
மேலும் 2015.10.05ம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் விடய இல .38 ற்கமைவாக :::::
*************************************************************
இலங்கை உயர் தொழிநுட்பக் கல்வி நிறுவகத்தின் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியினை வணிக துறைப் பட்டத்திற்கு சமனான அந்தஸ்த்துக்கு உயர்த்துதல்.
இதன்கீழ் அரச விவவகாரம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட 10/2014ஆம் சுற்று நிரூபத்தின் அடிப்படையில் 1990ம் ஆண்டு வெளியிடப்பட்ட 46/90 ஆம் இலக்க சுற்று நிரூபம் மற்றும் அதளுடன் தொடர்புடைய பிற சுற்று நிரூபங்களை இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக இலங்கை உயர் தொழிநுட்பக் கல்வி நிறுவகத்தின் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறிக்கு மாற்றுத்தகைமைய ஒன்றாக கருதுவதற்காக எடுத்திருந்த பொதுத்தீர்மானம் இரத்துச்செய்யப்பட்டது.
அதற்கமைய குறிப்பிட்ட பாடநெறியை பயின்ற மாணவர்கள் அரச துறையில் தொழில்வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது பாரிய சிக்கலுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. இதன் அடிப்படையில் தனியார் துறையில் கேள்வி குறைந்துள்ள நிலையில் இதற்கென இலங்கைத் தகைமைச் சட்டகத்தினை அமைத்து அதனை அமுல்ப்படுத்தும் வரை 46/90ஆம் இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கையை 2014.04.23ம் திகதி முதல் மீண்டும் அமுல்ப்படுத்துவதற்கு பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானப்பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது...
பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 46/90 ற்கமைவாக :::
1. Four Years Higher National Diploma in Accountancy (Final) of Srilanka Technical College.
2. A Degree in Commerce awarded by a recognized University ( Ordinary Pass )
3. Ministry of Education & higher education ( Technical Education Branch ) Ref no. TE/5/14/7
இதற்கமைவாக அரசினால் கோரப்படுகின்ற அனைத்து தொழில்களுக்கும் விண்ணப்பிக்க தகைமையுடையவர்கள் எனவும் சுற்றுநிமூபம் குறிப்பிட்டிருந்தும், அத்துடன் கிழக்கு மாகாண கல்வி அலுவலக பொறுப்பாளர் அவர்கள் (ஜனாப். நிசாம் சேர் அவர்கள் ) தினகரன் பத்திரிகைக்கு அளித்த செவ்வி ஒன்றில் HNDA பட்டதாரிகள் கிழக்கு மாகாண ஆசிரியர் தொழிலுக்கான விண்ணப்பத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று குறிப்பிட்டிருந்தும் . இன்று கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் கவணிப்பாரற்று ஒதுக்கி உதாசீனப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் மனவருத்தம் அடையத்தக்க ஒன்றாக காணப்படுகின்றது.
04 வருட கற்கை நெறியை பயின்று விட்டு இவ்வாறான அங்கீகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும் பட்டதாரி ஆசிரியர் பரீட்சைக்கு விண்ணப்பித்த போதிலும் ஏனையோருக்கு அனுமதி அட்டைகள் வந்துள்ள நிலையில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் இலக்கமான 0262220092 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது உங்களின் விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உங்கள் தொடர்பில் எந்தவொரு பாடத்திற்கும் விண்ணப்பிக்கச் சொல்லவில்லை. ஆகவே விண்ணப்பித்திற்கான அழைப்பு விடுக்கப்பட்ட பிரதியைப் பார்த்துவிட்டு பேசுங்கள் என்று உதாசீனம் செய்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்கள்.
ஆகவே இந்த அரசிடம் கேட்பது 04 வருட HNDA கற்கை நெறியை ஏன் அறிமுகம் செய்தீர்கள், ஏன் பிள்ளைகளின் மனதில் பொது வர்த்தகப் பட்டத்திற்கு சமனானது எனவும் அந்த சான்றிதழை எடுக்க 2000ரூபாய் கட்ட வேண்டியும் உள்ளது. இதெல்லாம் எதற்காக? இப்படியான ஏமாற்றுக் கல்வி தேவைதானா? அரசே வெளிப்படையாய் சொல்லுங்கள் HNDA வை பட்டத்திற்கு சமமாக தொழில்களுக்கு கருதமாட்டோம் இதனை செய்யாதீர்கள் என்று சொல்லுங்கள் . மக்களை ஏமாற்றாதீர்கள்?
செல்லாக்காசான HNDA பட்டதாரிகளுக்கு நல்லதொரு விடை கிடைக்குமா????