சந்திரானி பண்டார பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் !

வ்வரசு வழங்கிய தொழில் எண்ணிக்கை மத்திய வங்கி அறிக்கையில் பதியப்படாததேன் என பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நேற்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது,

நாம் எமது ஆட்சிக் காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்குவதில் அதிகம் கவனம்செலுத்தியிருந்தோம்.ஒரு அரசு வழங்கும் தொழில் எண்ணிக்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்படும். கடந்த கால அறிக்கைகளை அவதானித்த போது 2015ம் ஆண்டை விட 2016ம் ஆண்டில் வழங்கப்பட்ட தொழில்எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வரசு என்னவென்னமோ செய்து இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்கப் போகிறோம் என்றது. இப்போதுபார்த்தால் இலங்கையின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது, அரச நிறுவனங்களை தனியாருக்குவழங்குவதுமே இடம்பெற்று வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு தொழில்இல்லாமல் ஏங்கும் நிலையே ஏற்படும்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சந்திராணி பண்டார, இரண்டு வருடங்களில் 430000 தொழில்களை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.இந்த எண்ணிக்கையை இவர் எங்குபார்த்து கூறுகிறார் என்று விளங்கவில்லை.சில வேளை பிரதமரின் பொக்ஸ்வோகன் கம்பனியில் இந்த தொழில்வழங்கப்பட்டிருக்கலாம்.

இப்படியான தொகை இலங்கையின் மத்திய வங்கி அறிக்கை குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பில் நான்பகிரங்க தொலைக்காட்சி விவாதமொன்றிலும் கேள்வி எழுப்பியிருந்தேன்.எனது கேள்விக்கு இன்னும் விடைகிடைக்கவில்லை.

இவ்வரசின் காலத்தில் 430 000 தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் இலங்கை இளைஞர், யுவதிகள் ஓரளவுதன்னிறைவடைந்திருப்பார்கள்.அப்படி சிறிதேனும் இடம்பெற்றதான சான்றுகளில்லை.அமைச்சர் சஜித் பிரேமதாசஉயரமானவர்களுக்கு காவலர் தொழிலும் குட்டையானவர்களுக்கு லேபர் தொழிலும் வழங்கியிருந்தனர்.இதனைதான் இவர்கள் தங்களது தொழில் புரட்சியாக கருதுகிறார்களோ தெரியவில்லை. இவ்வாறான தொழில்களைத் தான்இவ்வரசு தொழில் புரட்சியாக கருதியிருந்தால் இவ்வரசு வெட்கிக்க வேண்டும்.

இவ்வரசு முறையான திட்டங்களை வகுத்து இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்க முன்வர வேண்டும். அதனைவிடுத்து இவ்வாறான போலியான செய்திகளை பரப்பி இலங்கை மக்களை மீண்டும் முட்டாளாக்க முனையவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -