நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 20.09.2017 முன்னெடுக்கப்பட்டது
அட்டன் டிக்கோயா நகரசபை கினிகத்தேன பொலிஸ். கினிகத்தேன சுகாதார காரியாலயம். லக்ஷபான இராணுவத்தினர் .மற்றும் நல்லத்தண்ணி அதிரடிப்படையினர்கள் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இந் நடவடிக்கையின் போது டிக்கோயா நகரப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்பு சூழல்கள் சோதணைக்குட்படுத்தப்பட்டது
இதன் போது நுளம்பு பெருக்கம் ஏற்படும் வகையில் காணப்பட்ட சூழலின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்பட்டுள்ளதுடன் ஒரு சிலருக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகரிகள் தெரிவித்தனர்



