விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் சிபாரிசிற்கு அமைவாக சுகததாச தேசிய விளையாட்டுக்கள் கட்டடத் தொகுதி அதிகாரசபையின் பணிப்பாளர்களுள் ஒருவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த தொழிலதிபர் ஹக்கீம் சரீப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை திறைசேரியும் விளையாட்டுத்துறை அமைச்சும் வழங்கியுள்ளது.
சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டார அமைப்பாளர்களுள் ஒருவரான ஹக்கீம் சரீப் பிரதி அமைச்சரின் அரசியல் செயற்பாட்டிற்கு பக்கபலமாக இருந்துவருவதோடு கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயற்பட்டுவருபவராவார். சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கிவருகின்றார்.
