'ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை' என்ற அடிப்படையிலே நல்லாட்சி அரசங்கத்தின் அனைத்துசெயல்பாடுகளும் அமைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷகுறிப்பிட்டார். நேற்று நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் ஊழல் அற்ற புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று எல்லாவிடயங்களிலும் நாடு இருந்ததை விட பின்னோக்கி செல்வதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த ஆட்சியில் மக்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்பதை தினம் தினம் இடம்பெறும்ஆர்பாட்டங்களினூடாகவும் போராட்டங்களினூடாகவும் ணாம் கண்டுகொள்ளமுடியும்.
பிரச்சினைகள் ஒரு புறம் தினம் அதிகரித்து செல்லும் நிலையில் அரசியல் கலாசாரத்தினை மாற்ற வந்த நல்லாட்சிஅரசாங்கம் இன்று தலைகீழாகவே பயணிக்கிறது. கட் அவுட் போஸ்டர் இல்லாத புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக மேடை போட்டு கத்தியவர்களின்போஸ்டர்களும் கட்டவுட்களுமே இன்று கொழும்பில் திரும்பிய பக்கமெல்லாம் காண முடிகிறது.
அன்று கட்டவுட் இல்லாத அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக தற்போதய ஜனாதிபதி கூறிய போது அதனை வரவேற்றவர்கள் இன்று மௌனமாக இருப்பது கவலைக்குறிய விடயமாகும் என அவர் குறிப்பிட்டார்.