மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் மூதூர் பிரதேசத்தில் நீர் விநியோகத்துக்கு போதியளவு நீர் இல்லாமையால் 22.09.2017 இன்று தொடக்கம் நிலமை சீராகும் வரை அதிகாலை5.00 மணி முதல் காலை -10.00 வரை மாத்திரமே நீர் விநியோகம் வழங்கப்படும்.
எனவே பாவனையாளர்கள் அதற்குரிய முன் ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர்வெட்டு மூதூர், தோப்பூர், ஈச்சிலம் பற்று, சேருவில ஆகிய பகுதிகளில் இவ் நீர் விநியோகம் நீர் உந்துபகுதிகளில் போதியளவு நீர் கிடைக்கும் வரை அமுலாகுமென
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.